கலை மேல் இருந்த தீராக்காதலால் தந்தையின் வெறுப்புக்கு ஆளான தூத்துக்குடி காமெடி நடிகர்

by sankaran v |   ( Updated:2022-06-07 16:44:15  )
கலை மேல் இருந்த தீராக்காதலால் தந்தையின் வெறுப்புக்கு ஆளான தூத்துக்குடி காமெடி நடிகர்
X

pulimoottai ramasamy

முத்துக்குளிக்கும் நகர்...உப்பளத்திற்குப் பெயர் போன நகர் எதுவென்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருவது தூத்துக்குடி. இங்கு பல தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு இருந்து கலைத்தாகம் எடுத்து சினிமாவில் நுழைந்து சாதித்தவர்கள் வெகுசிலர் தான்.

அவர்களில் முக்கியமானவர் சந்திரபாபு புகழ்பெற்ற காமெடி நடிகர். பயில்வான் ரங்கநாதன், இமான் அண்ணாச்சி ஆகியோரும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் ஒருவர் தான் பழம்பெரும் காமெடி நடிகர் புளிமூட்டை ராமசாமி. இவர் 15.5.1912ல் பிறந்தார்.

1941ல் இவர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படம் வெளியானது. அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம். இந்தப்படத்தில் இவரும் நடித்திருந்தார். இவரது இயற்பெயர் ராமசாமி. அப்போது கலைவாணர் இவரை அந்தப்படத்தில் அடிக்கடி புளிமூட்டை என கிண்டல் செய்வார். அந்தப் பெயரே அனைவரையும் கவரச் செய்து பின்னாளில் நிலைத்து விட்டது.

Pulimoottai Ramasamy

நாடகங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் நடித்த டிகேஎஸ்.நாடகக் கம்பெனி கலைக்கப்பட்டது. இதனால் சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு திருணம் செய்து கொண்டார். கோவிலில் பட்டாராக பணிபுரிந்து வந்தார்.

சில மாதங்களுக்குள் அவரது மனைவியும் இறந்து போனார். செய்வதறியாமல் திகைத்து நின்ற அவர் என்எஸ்கே.வின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். உடனே அவரது தந்தை மகனின் நல்வாழ்வுக்காக 2வது திருமணமும் செய்து வைத்தார்.

அவர் பிரபாவதி, மனோன்மணி, ஹரிதாஸ், மருதநாட்டு இளவரசி, மோகினி, ராஜகுமாரி, மதன மோகினி, சர்வாதிகாரி, மணமகள், நல்ல தங்கை உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பல படங்களில் நாரதர் வேடங்களில் செமயாக நடித்துள்ளார். கலைக்காக கோவில் குருக்கள் பணியைத் துறந்தவர். இவரது தந்தையும் கோவில் குருக்கள் தான்.

ராமசாமிக்கு கலை மேல் அதீத ஆர்வம். இதனால் ஒரு கட்டத்தில் தந்தையே இவரை வெறுத்துள்ளார். தனது 14ம் வயதில் சொந்த ஊரை விட்டு வெளியேறி பல நாடகக்குழுவில் சேர்ந்து பல நாடங்களில் நடித்துள்ளார்.

pulimootai ramasamy

எஸ்.வி.சுப்பையா, சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், ஏ.பி.நாகராஜன், பி.வி.நாராயணசாமி ஆகியோருடன் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். மனோகரா நாடகத்தில் நடித்து அசத்தினார். மேனகா நாடகத்தில் என்எஸ்கே உடன் இணைந்து நடித்தார்.

சதிலீலாவதி படத்தில் தான் என்எஸ்கே.வுடன் அறிமுகமானார் ராமசாமி. எம்ஜிஆருடன் வனமோகினி, மருதநாட்டு இளவரசி, சர்வாதிகாரி படங்களில் நடித்தார்.

ரஞ்சனுடன் மங்கம்மா சபதம் படத்திலும், பொன்னப்ப பாகவதருடன் பிரபாவதி படத்திலும் நடித்தார். கன்னியின் காதலி, மதன மோகினி, நல்ல தம்பி படங்கள் முத்திரை பெற்றவை.

Pulimoottai Ramasamy

என்எஸ்கேக்கு ராமசாமியிடம் பிடித்தமான ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால் அவர் உருவில் எவ்வளவு பெரியவரோ அதே போல் அவரது நடிப்பும், குரலும் கம்பீரமானது. அவர் நடிக்கும் போது அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியே ஆடும்.

இதைக் கண்ட கலைவாணருக்கு அந்த வித்தியாசமான நகைச்சுவை உணர்வு ரசிக்க வைத்தது. இதற்காகவே அவருக்கு பல பட வாய்ப்புகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story