கலையைப் பொறுத்தவரைக்கும் உடனே கிடைச்சிராது....ரெண்டு வருஷமா பிளாட்பாரத்துல தூங்கினேன்....! இவரா இப்படி சொல்றாரு..

by sankaran v |   ( Updated:2022-05-23 17:30:08  )
கலையைப் பொறுத்தவரைக்கும் உடனே கிடைச்சிராது....ரெண்டு வருஷமா பிளாட்பாரத்துல தூங்கினேன்....! இவரா இப்படி சொல்றாரு..
X

sendrayan

தமிழ்சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வளவு பேர் நமக்கே தெரியாமல் வந்து போகின்றனர். அவர்களில் ஒருவர் தான் சென்றாயன். இவர் தலைமுடியையும், முகத்தையும்பார்த்தாலே போதும். அது காட்டும் அபிநயங்களில் நமக்கே சிரிப்பு பொத்துக்கொண்டு வந்து விடும்.

ஒல்லிக்குச்சியாக இருந்தாலும் முகபாவனைகளில் மனிதர் நம்மை எப்படியாவது சிரிக்க வைத்து விட வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடுவது நமக்கு கண்கூடாகத் தெரிந்து விடும்.

சென்றாயப் பெருமாள் என ஒரு கடவுளின் பெயர் உள்ளது. அவரது நினைவாக சென்றாயன் என்று இவரது தாய் பெயர் சூட்டியுள்ளாராம்.

பொல்லாதவன், ஆடுகளம், மூடர்கூடம், மெட்ரோ, பால்பாண்டி, ரம்மி, பஞ்சுமிட்டாய், சிலம்பாட்டம், அட்ரா மச்சான் விசிலு என்று இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் காமெடியில் மட்டுமின்றி சில படங்களில் வில்லத்தனமான கேரக்டர்களிலும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

இவர் நவம்பர் 5, 1984ல் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் பிறந்தார். கயல்விழி என்பவரை 2014ல் மணந்துள்ளார்.

sendrayan with his wife

சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டு சென்னை வந்துள்ளார். அப்போது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் டீ கடைகள், திருமண மண்டபம், ஓட்டல் என்று பல இடங்களில் வேலை செய்துள்ளார். சினிமாவுக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று 15 ஆண்டுகள் கடுமையாக போராடியுள்ளார்.

இவர் முதன் முதலில் செம்மல என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இதன் இயக்குனர் வெற்றி மாறன். பின்னர் அவர் தான் 2007ல் இவருக்கு பொல்லாதவன் படத்தில் நடிக்க வைத்து தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

sendru

தொடர்ந்து வந்த மூடர்கூடம் படமும், அதில் இவர் பேசிய டயலாக்கும் பெரும்பாலான ரசிகர்களை ரசிக்க வைத்தது. ரௌத்திரம் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்தார். விஷயம் வெளியே தெரியக்கூடாது படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனால் தான் என்னவோ இந்தப்படமும் வெளியே தெரியாமல் போய்விட்டது.

2018ல் பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சென்றாயன். இவரது செல்லப்பெயர் சென்று.

பஞ்சுமிட்டாய் படம் நடிக்கும்போது ஷ_ட்டிங்க் பார்க்க வந்த ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டது. இவர் பிறந்த ஊரான வத்தலக்குண்டுவில் உள்ள சென்றாயப் பெருமாள் கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றது.

ஆரம்பத்தில் தான் கஷ்டப்பட்ட காலத்தை இவ்வாறு பகிர்கிறார் சென்றாயன். சுல்தான் படத்தில் இவர் வேற லெவலில் நடித்துள்ளார்.

நான் தியேட்டர்ல கிளாப் வாங்கி ரொம்ப நாளாச்சு. நான் பிக்பாஸ் வீட்டுல இருக்கும்போது கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக கார்த்தி சார் பிக் பாஸ் வீட்டுக்கு கெஸ்ட்டா வந்தாங்க. அப்போ கார்த்தி சார்ட்ட உங்க படத்துல நான் நடிக்கணும்னு கேட்டேன்.

sendrayan

அவரு வெளிய வந்ததும் டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் சார்ட எனக்காக கேட்டார். உடனே டைரக்டர் எனக்கான ரோல் கொடுத்தார். காது கேட்காத வித்தியாசமான கேரக்டர். இந்தப்படத்தைப் பார்க்கும்போது ஷ_ட்டிங்க்ல ஒரு திருவிழா மாதிரி இருக்கும். ஜே ஜே ஜேன்னு.

ரௌத்திரம் படத்தில ஜீவா சார் நடிச்சாரு. இந்தப்படத்தில நான் வில்லனா நடிச்சிருக்கேன். சார் இந்த உடம்ப வச்சி எப்படி வில்லனா நடிக்கறதுன்னு கேட்டேன். டைரக்டர் கோகுல் சார் தான் சொன்னாரு. நீ என்னை நம்பி வா. நான் பார்த்துக்கறேன்னாரு.

காக்கா முட்டை படம் பண்ணும்போது தான் பஞ்சுமிட்டாய் படமும் பண்ணினேன். தெறி படம் பண்ணும்போது இன்னொரு படமும் வந்தது. அதில தான் நான் லாக் ஆயிட்டேன். அவங்களும் இதே டேட்ல கால்ஷீட் கேட்டாங்க. என்னால கொடுக்க முடியாது. ஆனா இதனால நான் ரொம்ப அழுதுருக்கேன்.

எங்க போயி அழறது. பாத்ரூம்ல தான் போய் அழுவேன். கலையைப் பொறுத்தவரைக்கும் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் உடனே கிடைச்சிராது. உடனே கிடைச்சிட்டா அந்த இது அந்த இது இல்லேல. நாம இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு மெனக்கெட்டா மட்டும்தான் ஒரு இடத்துல போயி உட்கார முடியும்.

அப்ப எங்கூட இருந்தவங்கள்ல சூரி அண்ணன், யோகிபாபு அண்ணன், விஜய்சேதுபதி அண்ணன் எல்லாரும் என்னை மாதிரி கஷ்டப்பட்டு இப்போ ராஜாங்கற சிம்மாசனத்துல உட்கார்ந்துருக்காங்க. நாளைக்கு நானும் உட்காருவேன். அதுக்கு தேவையான படங்கள் தான் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு தேவையான எபெக்ட் தான் போட்டுக்கிட்டு இருக்கேன்.

அப்போலாம் தியேட்டர்ல இன்டர்வெல் விட்டதும் ஸ்நாக்ஸ் எல்லாம் பெஞ்சுக்கே வரும். சமோசா, கடலைமிட்டாய், முறுக்கு, வேர்கடலை எல்லாம் வரும். 10 காசு, 15 காசுன்னு விக்கிறது. டிக்கெட்டே ரொம்ப கம்மி தான். 40 காசு, 50 காசு தான் டிக்கெட்.

sendrayan

கடலை மிட்டாய் விக்கறதுக்காக தியேட்டர்க்கு போல. தியேட்டர்ல வந்து படம் பார்க்கணும். படம் பார்த்துக்கிட்டே இருக்கணும். ஆனா ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருக்கணும். அப்போலாம் ஒரு படத்தை 15 வாட்டி பார்த்துருக்கேன்.

நான்லாம் வந்து ரூம் பிடிக்கவே இரண்டரை வருஷமாச்சு. 2 வருஷமா பிளாட்பாரத்துல தான் தூங்கினேன். அதுக்காகத் தான் அங்க போனேன். எனக்கு வந்து ரூம் பிடிக்கத் தெரியாது. வாடகை எல்லாம் கொடுக்கத் தெரியாது. வடழபழனி பஸ்டாண்டு, கோவில் வாசல், அன்னதான சாப்பாடு இப்படி தான் பொழுது கழிஞ்சது.

அதெல்லாம் சாப்பிட்டது அந்த முருகனோட அருள், பெருமாள், கண்ணனோட ஆசீர்வாதம். அதெல்லாம் இருந்ததால தான் இன்னிக்கு இவ்ளோ பெரிய இடத்துல வந்து உட்கார்ந்துருக்கேன்.

Next Story