ஆ ஊன்னா வடிவேலுவையே நோண்டிட்டு இருக்கக்கூடாது- டென்ஷன் ஆன பிரபல காமெடி நடிகர்…
வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர்களான சிசர் மனோகர், முத்துக்காளை ஆகியோர் சமீபத்தில் கலந்துகொள்ளும் பேட்டிகளில் எல்லாம் வடிவேலுவை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் சிசர் மனோகர் ஒரு படி மேலே போய், “கொஞ்சம் விட்டிருந்தால் வடிவேலுவின் சோலியை முடித்திருப்பேன்” என்றெல்லாம் கூறினார்.
வடிவேலு என்னுடைய வாய்ப்பை பறித்துவிட்டார்
சிசர் மனோகர் சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டியில், “வடிவேலு நடிக்க வந்த புதிதில் நான்தான் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்வேன். ஆனால் ஒரு கட்டத்தில் என்னுடைய வாய்ப்பையே பறிக்கத்தொடங்கிவிட்டார்.
பகவதி படத்தில் வடிவேலுவுக்கு இணையான ஒரு கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் வடிவேலு என்னுடைய கதாப்பாத்திரத்தையே நீக்கிவிட்டார். அப்போது வடிவேலுவின் சோலியையே முடித்துவிடலாம் என்று இருந்தேன். சீமான்தான் என்னை அமைதியாக போகச்சொல்லிவிட்டார். அதன் பின் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கவே இல்லை.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் இளவரசு கதாப்பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் வடிவேலு அதனை தடுத்துவிட்டார். ஆதலால் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில்தான் என்னால் நடிக்க முடிந்தது” என கூறியிருந்தார்.
வடிவேலுவையே நோண்டக்கூடாது
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகரான டெலிஃபோன் ராஜ், “இப்போது வடிவேலு குறித்து அவதூறாக பேசுபவர்கள் எல்லாருமே வடிவேலு வளர்த்துவிட்ட ஆட்கள்தான். வடிவேலு இல்லை என்றால் இவர்கள் இல்லை. ஆனால் இவர்களுக்கு வடிவேலு போல் ஆகவேண்டும் என்று ஆசை இருக்கிறது. அது சகஜம்தான். அதற்காகத்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். சும்மா சும்மா வடிவேலுவையே நோண்டிக்கொண்டிருக்ககூடாது. அவர்கள் வளர்ச்சியை வடிவேலு தடுக்கவில்லை. தன்னை வளர்த்துவிட்ட வடிவேலு மீது கொஞ்சமேனும் விசுவாசம் இருக்கவேண்டும். எனக்கு அந்த விசுவாசம் இருக்கிறது” என பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: பாராட்டினாரு.. பாட்டு எழுத கூப்பிடவே இல்லை..அப்புறம்தான் புரிஞ்சது!. கவிஞர் சொன்ன ரகசியம்…