திரும்பவும் வந்துட்டான்யா...வந்துட்டான்யா.....செகண்ட் இன்னிங்ஸில் ஜெயிப்பாரா வடிவேலு?
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவனாக வந்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் பேசுற ஒவ்வொரு டயலாக்குமே தற்போது மீம்ஸ் ஆகி வருகிறது.
தரையைத் தொடடா...நீ புடுங்கறது எல்லாம் தேவையில்லாத ஆணி தான்..இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமா ஆக்கிட்டாங்கடா... இந்த டயலாக்கை சொன்னாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் வடிவேலு தான். இவரது பாடி லாங்குவேஜ் தான் இவருக்கு பிளஸ்.
நடிப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த பாடகராகவும் இருப்பது வடிவேலுவின் தனிச்சிறப்பு. மீண்டு வரும் வடிவேலு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் வாயிலாக மீண்டும் தமிழ்த்திரை உலகுக்கு வரும் வைகைப்புயல் நிலைத்து நிற்பாரா என்பதைப் பார்க்கலாம்.
டைரக்ட்ர் சுராஜ் இந்தப்படத்தைப் பற்றி சொல்லும்போது...
கொரானா காலகட்டத்துல தான் இந்தக் கதையை பேசவே ஆரம்பிச்சோம். இந்தக்கதையை டிஸ்கஷன் பண்ணிக்க முடியாது. ரெண்டு பேரும் பார்த்துக்க முடியாது. நானும் வடிவேலு சாரும். அவரு மதுரைல இருப்பாரு. நான் சென்னைல இருப்பேன்..கதை வந்து போன்ல தான் சொன்னேன்.
பண்ணிட்டு யாருக்கு பண்ணலாம்னு வடிவேலு அண்ணன் சொல்போது லைக்காக்குத் தான் அண்ணன் ஒரு கமிட்மெண்ட்ல இருந்தாரு. தமிழ்க்குமரன் சாருக்கிட்ட போய்ட்டு போன் பண்ணி சொன்னேன். அண்ணன் வந்து ஒரு நல்ல சப்ஜெக்ட்டோட இருக்காரு. பண்ணலாமான்னு கேட்டேன்.
உடனே ஓகே...சார்...சுபாஷ் சாருக்கிட்ட பேசச் சொல்லிடலாம்னுட்டு சுபாஷ்கரனும், வடிவேலு சாரும் பேசினாங்க. அவரு உள்ள வந்தாரு. ஒவ்வொரு ஸ்டெப்பா உள்ளே வந்தோம். ஃபுல்லா என்டர்டெயின்மென்ட் காமெடி மூவியா இந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் வந்துருக்கு...
வடிவேலு இந்தப் படத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
ஒரு நாய்க்கிட்ட எவ்வளவு ஹைலைட்ஸ் இருக்குன்னு எடுத்தது தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். நாய்க்கிட்ட இருக்குற நன்றி, விஸ்வாசம் யாருக்கிட்டயும் இல்ல. இது ரொம்ப நல்லா வந்துருக்கு.
வீட்டுநாய், தெருநாய், சொறிநாய், சேட்டை நாய், வேட்டை நாய், ஓநாய் வரைக்கும் பார்த்தவன்டா இந்த ஒபாமா...இதுதான் இந்தப் படத்தோட பஞ்ச்...! ஒரு பஞ்ச்...ரெண்டு பஞ்ச் எல்லாம் கிடையாது...பஞ்சு பஞ்சு மூட்டையா இருக்கு...இந்தப்படத்துல...!
இதுல வர்ற விஷயங்கள் எல்லாமே ரொம்ப அழகா...நின்று நிதானமா நிறுத்தி விளையாண்டிருக்கோம்.
கதை சின்ன கதை தான்..ஆனா நகைச்சுவை நிறைய இருக்கும். பிரபுதேவா சார் ஒரு பாட்டுக்கு மாஸ்டரா இருந்துருக்காரு. நாங்க இதைப் பெரிய கதையா எடுத்து வரலாறா எடுக்கணும்கற அவசியம் எல்லாம் கிடையாது. தகராறு இல்லாம எடுத்தா போதும்.
இந்தப்படத்திற்காக நாலு பாடல்களை நாலுவிதமா பாடி அசத்தியுள்ளார் வடிவேலு. இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்களைப் பற்றி வடிவேலு என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
ஓ மை காட் நான் பணக்காரன்....ஓ மை காட்...உன்னைத் தொடப்போறேன்...னு ஒரு பாடல். இது ஃபோக். இது அப்படியே போதுன்னு பார்த்தா உள்ள சேர்மானம் சேர்க்குறாரு...பாட்டெல்லாம் முடிஞ்ச உடனே அப்படியே குழம்பு மணக்குது. கறிக்கொழம்பு மாதிரி கமகமக கமகமங்குது. அப்படி ஒரு சமையல். பிச்சி எடுத்துட்டாரு...சந்தோஷ் நாராயணன்.
நான் டீசன்டான ஆளு...என் கேங்கல நானு ஃபூலு...நாய் சேகர் கூலு...என் மூளை தான் என் டூலு...அடி பின்னி எடுத்துட்டாரு...வெரைட்டி வெரைட்டியா என்ன பாட வச்சிட்டாரு.
இந்தப்படத்துல ஆல்பம்ஸ்னு போட்டு...ஒன்லி வடிவேலுன்னு போட்டுருக்கோம்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாய்சேகராக நடித்து திரும்ப வந்துள்ளார். அதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்த்திரை உலகமும் எதிர்பார்த்து வருகிறது.
இது தவிர படத்தை லைக்;கா புரொடக்ஷன்ஸ் வெளியிட உள்ளதால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. ஷிவாங்கி கிருஷ்ணகுமார், ரெடின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.