பிரபல காமெடி நடிகர் வாழ்க்கையில் விளையாடிய விக்கிப்பீடியா.... என்ன கொடுமை சார் இது?

கோலிவுட்டில் சத்தமில்லாமல் பல காமெடி நடிகர்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் டாக்டர் படம் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லியை அடுத்த காமெடி கிங் என ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். ஆனால் இவருக்கு முன்பே தமிழ் சினிமாவில் களமிறங்கி கலக்கி வருபவர் தான் முனீஸ்காந்த்.
இவரின் உண்மையான பெயர் ராமதாஸ் படத்திற்காக தனது பெயரை முனீஸ்காந்த் என மாற்றி வைத்துள்ளார். முண்டாசுப்பட்டி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முனீஸ்காந்த் முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்ததால் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி ஒரு சிறந்த காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் விக்கிப்பீடியா இவரின் வாழ்க்கையில் விளையாடிய சம்பவம் ஒன்றை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி முனீஸ்காந்த் கூறியிருப்பதாவது, "என் திருமணத்திற்கு முன்பு எனது மனைவி என்னிடம் விக்கிப்பீடியாவில் குறிப்பிட்டிருந்த வயதை சுட்டிக்காட்டி என்னங்க உங்களுக்கு 56 வயதா? என கேட்டார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது என கேட்டதோடு உடனடியாக எனது பள்ளி சான்றிதழை காட்டி என்னுடைய உண்மையான வயது இதுதான் என்பதை அவருக்கு நிரூபித்தேன். என் வாழ்க்கையில விளையாடுறதுல விக்கிப்பீடியாவுக்கு சந்தோசம் போல விளையாடிருச்சு.
அதுக்கப்புறம் அது யாரு? என்ன? எப்படி அதை மாற்றலாம் என்பதை எல்லாம் கேட்டறிந்தேன். ஆனால் பின்னர் அதை அப்படியே விட்டுவிட்டேன். அது இனிமேல் எப்படி இருந்தால் என்ன நமக்குதான் திருமணம் ஆகிவிட்டதே" என கூறினார். இருப்பினும் தற்போது விக்கிப்பீடியாவில் முனீஸ்காந்தின் உண்மையான வயது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி விக்கிப்பீடியாவில் முனிஷ்காந்தின் வயது 36 ஆக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நல்ல வேளை கொஞ்சம் விட்டிருந்தா அவரு கல்யாணமே நின்றுக்கும். விக்கிப்பீடியா ஒரு காமெடி நடிகர் வாழ்க்கையில இப்படி விளையாடிருச்சே என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.