நயன்தாரா சொன்னதை நிறைவேற்றிய தளபதி விஜய்.! இது என்ன புது கதையா இருக்கே.!?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களின் இயக்கத்தில் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தில் ராஜு அவர்கள் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

Vijay

இந்த படத்தை இயக்குனர் வம்சி அவர்கள் இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் காதல் கதை தான் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் ....வலிமை திரைப்படத்தின் முதல் விமர்சனம்.!? முதல் பாதி இரண்டாம் பாதி..!

மாஸ்டர் படத்தில் நயன்தாரா விஜய்யை பார்த்து காதலுக்கு மரியாதை எல்லாம் விஜய்க்கு மறந்து வெகு காலம் ஆகிவிட்டது என கூறியிருப்பார். இதனையடுத்து தற்போது நயன்தாரா சொன்னதை நிறைவேற்றுவது போல தளபதி விஜய் இந்த புதிய படத்தில் காதலை மையப்படுத்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story