Kanguva: மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஒரு சிலர் படத்தை பெரிய அளவில் ட்ரோலும் செய்து வருகிறார்கள். சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான திரைப்படம் கங்குவா. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டது.
இந்தியன் 2 பரவாயில்ல: சூர்யாவின் கெரியரிலேயே இந்த படம் தான் அதிக அளவு பொருள் செலவில் எடுக்கப்பட்டது .அதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தை இந்தியன் 2 திரைப்படத்தோடு ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .
இதையும் படிங்க: Kanguva: அடக்கொடுமையே… அமரன்ல பாதி கூட தாண்டல போலயே?!.. கங்குவா படத்தின் தமிழ்நாடு வசூல் இதோ!…
இதுவரை வெளியான படங்களில் இந்தியன் 2 திரைப்படத்திற்கு தான் அதிக ட்ரோல்கள் வெளியாகின. அதை கங்குவா திரைப்படம் முறியடித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு இன்னும் அதிகமான ட்ரோலுக்கு ஆளான படமாக கங்குவா திரைப்படம் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் படம் வெளியாவதற்கு முன் பட குழுவினர் வெளிப்படுத்திய பில்டப் தான் என்று தெரிகிறது.
ஓவர் பில்டப்: ஒரு பக்கம் ஞானவேல் ராஜா 2000 கோடி படம் வசூல் ஆகும் என கூறி இருந்தார். இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் படமாக இது இருக்கும் என சூர்யாவும் கூறி இருந்தார். சிறுத்தை சிவா சூர்யாவை பற்றி மிகப் பெரிய அளவில் பில்டப்பை ஏற்றி சொல்லி இருந்தார். ஒட்டுமொத்தமாக பட குழுவினர் படத்தைப் பற்றி பெரிய அளவில் பெருமையாக பேசினார்.
அதனால் அவர்கள் சொன்னதையும் மீறி அதிகளவு ஒரு எதிர்பார்ப்பில் ரசிகர்கள் படத்தை பார்க்கச் செல்ல அங்கு சூர்யாவின் நடிப்பைத் தவிர ஒன்றுமே இல்லை என்பதை போல படம் இருந்ததாக படம் பார்த்த அனைவரும் கூறி வருவதை நாம் பார்க்க முடிந்தது. கங்குவா திரைப்படம் வெளியாகி முதல் நாள் வசூலே எட்டு கோடி தான் என சொல்லப்படுகிறது .
இதையும் படிங்க: தம்பிக்கு ஒரு நியாயம்? அண்ணனுக்கு ஒரு நியாயமா? சூர்யாவை மட்டும் இப்படி கவுத்திப்புட்டீங்களே..!
கெத்து காட்டும் அமரன்: இது அமரன் திரைப்படத்தை விட ஏழு கோடி கம்மியான வசூல் ஆகும். அமரன் திரைப்படம் வெளியாகி முதல் நாள் வசூலாக 15 கோடி என்ற வகையில் வசூலித்திருந்தது. அது மட்டுமல்ல கங்குவா திரைப்படத்திற்காக தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட தியேட்டர்கள் குறித்த விவரமும் வெளியாகியிருக்கிறது .இதுவரை 700 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளி வந்தன. ஆனால் அந்த படத்திற்கு வெறும் 420 தியேட்டர்கள்தான் ஒதுக்கப்பட்டதாம். ஏனெனில் அந்த அளவுக்கு அமரன் திரைப்படம் இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
Kanguva: பொதுவாக…
நடிகர் தனுஷ்…
எஸ்கே 23…
கங்குவா திரைப்படம்…
கங்குவா திரைப்படம்…