அஜித்துக்கு ஆப்பு வைக்க போட்டி நடிகரின் ஆட்கள் போட்ட பிளான்!.. இவ்வளவு கிரிமினலா யோசிச்சிருக்காங்களேப்பா!.
திறமையும் கடின உழைப்பும் இருந்தால் யார் வேண்டுமென்றாலும் முன்னுக்கு வரலாம் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருபவர் அஜித்குமார். இவர் நடிக்க வந்த புதிதில் இவர் பட்ட அவமானங்கள் கோடி. அந்த அவமானங்களை எல்லாம் தகர்த்தெரிந்து, தமிழின் தவிர்க்கமுடியாத நடிகராக உருமாறினார் அஜித்.
இந்த நிலையில் அஜித்குமார் நடிக்க வந்த புதிதில் அவரின் வளர்ச்சியை தடுப்பதற்காக அவரது போட்டி நடிகரின் ஆட்கள் பல பிளான்களை போட்டதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
“அஜித் நடித்த காதல் கோட்டை திரைப்படம் மாபெறும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் மார்க்கெட் பல மடங்கு ஏறியது. அஜித்தின் மார்க்கெட் ஏறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத போட்டி நடிகரின் ஆட்கள் எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது அஜித்தின் மார்க்கெட்டை காலி செய்ய வேண்டும் என திட்டம் போட்டார்கள்.
ஆனால் போட்டி நடிகரோ தங்களுடைய ஆட்கள் செய்யும் காரியத்தை தடுக்க நினைத்தார். ஆனால் அவரால் தடுக்கமுடியவில்லை” என கூறும் செய்யாறு பாலு,
“அஜித் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடும்போது, போட்டி நடிகரின் ஆட்கள் திரையரங்கின் ஒவ்வொரு மூலையிலும் ஐந்து ஐந்து பேரை செட் செய்து உட்காரவைத்தார்கள். திரைப்படத்தின் பாடல் காட்சி வரும்போது அந்த ஆட்கள் வேண்டுமென்றே எழுந்து திரையரங்கை விட்டு வெளியே தம் அடிக்கப்போவார்கள்.
இதையும் படிங்க: கமல்-ரஜினி ஆகியோரின் பட வாய்ப்புகளை மொத்தமாக அள்ளிக்கொண்டு போன விஜயகாந்த்… கேப்டன்னா சும்மாவா!!
இதனை பார்க்கும் பத்திரிக்கையாளர்களும் மற்ற ஆடியன்ஸும் மொக்கை பாடல் போல என்று நினைப்பார்கள். மேலும் பத்திரிக்கையாளர்கள் பாடல் மொக்கை என விமர்சனங்கள் எழுதுவார்கள். இப்படி எல்லாம் செய்து அஜித்தை காலி செய்யப்பார்த்தார்கள். ஆனால் யார் வளர்ச்சியையும் யாராலும் தடுக்கமுடியாது. இது இயற்கையின் கோட்பாடு. அது அஜித் விஷயத்தில் மிகச் சரியாக நடந்தது” என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.