எனக்கு சொல்லாம எதுக்கு கங்கை அமரனுக்கு வாய்ப்பு கொடுத்தீங்க.. – வம்பு செய்த எம்.எஸ்.வி..!

msv gangai amaran
தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் கங்கை அமரன். கங்கை அமரன் அவரது காலக்கட்டத்தில் சென்ற துறைகளில் எல்லாம் கொடி நட்டவர். அவர் இயக்கிய திரைப்படங்கள், இசையமைத்த பாடல்கள் என எல்லாமே பெரும் ஹிட் கொடுத்து வந்தன.
கங்கை அமரன் அறிமுக இசையமைப்பாளராக இருந்தபோது அவருக்கு சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து வந்தது. அப்போது அவருக்கு பெரிய வாய்ப்பு என கிடைத்த படம் வாழ்வே மாயம். 1982 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இசை அமைப்பதற்கான வாய்ப்பு கங்கை அமரனுக்கு வந்தது.

gangai amaran
வேறு மொழியில் வந்த திரைப்படத்தின் ரீமேக்காக வாழ்வே மாயம் திரைப்படத்தை இயக்கி வந்தனர். அப்போது இளையராஜா மிகவும் பிசியாக இருந்த காரணத்தால் இசை அமைப்பதற்கான வாய்ப்பு கங்கை அமரனுக்கு வந்தது. ஆனால் அண்ணன் இருக்கும்போது நான் இசையமைக்க முடியாது என கங்கை அமரன் கூறியுள்ளார்.
எம்.எஸ்.வியுடன் நடந்த போட்டி:
பிறகு இயக்குனர் சமரசம் செய்து வைத்துள்ளார். அதன் பிறகு வாழ்வே மாயம் படத்தில் ஏன் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என எம்.எஸ் விஸ்வநாதன் சண்டைக்கு வந்துள்ளார். அதற்கு இயக்குனர் பதிலளிக்கும்போது “வேற மொழி பாடலை தமிழுக்கு மொழிப்பெயர்க்கணும். அவ்ளோதான், அதுனாலதான் உங்களை கூப்பிடலை” எனக் கூறியுள்ளார்.

Vaazhvey_Maayam
இதை கேட்ட கங்கை அமரன் “சார் நான் சொந்தமாகதான் இந்த படத்துக்கு பாட்டு போடுவேன்” எனக் கூறி இசையமைத்துள்ளார். அந்த படத்தில் அனைத்து பாடலும் ஹிட் அடித்துள்ளது.