ஐயப்ப சுவாமியை கொச்சைப்படுத்தி கானா பாடல்!… பா.ரஞ்சித், இசைவாணி மீது பாய்ந்த வழக்கு!…

Published on: November 23, 2024
isaivani
---Advertisement---

ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கானா பாடலை பாடிய இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது, சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு பக்தர்கள் மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து, சபரிமலைக்கு செல்வதை பலரும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் ஐயப்பன் சன்னதிக்கு பெண்கள் செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றது. அதாவது 10 வயது உட்பட்ட பெண்கள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டுமே ஐயப்ப ஸ்வாமி கோயிலுக்கு மாலை அணிந்து செல்ல வேண்டும் என்பது நிபந்தனை.

இதையும் படிங்க: சும்மா வரல சினிமாவுக்கு… அடேங்கப்பா ஜி.வி.பிரகாஷ்குமாரோட அனுபவத்தைப் பாருங்க…!

ஐயப்ப சுவாமி கோயிலுக்கு அனைவரும் வரவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது வரை அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்யப்படும் விழாவில் மார்கழியில் மக்கள் இசை என்கின்ற இசை நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த வகையில் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இசைவாணி ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பாடல் பாடி இருக்கின்றார். அதில் “ஐ ஆம் சாரி ஐயப்பா… நா உள்ள வந்தா என்னப்பா… நான் தாடி காரன் பேபி.. இப்போ காலம் மாறி போச்சு! நீ தள்ளி வச்சா தீட்டா… நான் முன்னேறுவேன் மாசா! என்று பாட்டு பாடி இருக்கின்றார்.

கடவுள் நம்பிக்கை குறித்து இழிவுபடுத்து வகையில் பாடலை பாடியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டான நிலையில் இணையவாசிகள் பலரும் அவரை கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடியதற்காக இசைவாணியை கைது செய்ய வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இயக்குனர் பா.ரஞ்சி அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துமத கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் இசைவாணி பாட்டு பாடி இருக்கின்றார்.

இதையும் படிங்க: படம் பார்க்கும்போதே அந்த இயக்குனருடன் ஒர்க் பண்ணனும்னு ஆசை… SK.சொன்ன பிளாஷ்பேக்

இந்த நிகழ்ச்சியை பா ரஞ்சித் ஏற்பாடு செய்திருப்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து ஐயப்பன் பக்தர் சங்கத்தினர் புகார் கொடுத்திருக்கிறார்கள். இந்த பாடலால் தற்போது இசைவாணி மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.