கடந்த மே மாதம் “தி கேரளா ஸ்டோரி” என்ற திரைப்படம் வெளிவந்து அதிக சர்ச்சைகளை கிளப்பியது. இத்திரைப்படத்திற்கு வழுத்த எதிர்ப்புகளின் காரணமாக தமிழ்நாட்டில் வெளியான ஒரே நாளில் இத்திரைப்படம் பல திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. இத்திரைப்படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியிருந்தார்.
அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தொடர்ந்து சுதிப்தோ சென் “சஹாராஸ்ரி’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் போஸ்டர் நேற்று வெளிவந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அந்த போஸ்டரை பார்த்து திடுக்கிட்டனர். அதாவது “சஹாராஸ்ரி” திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த தமிழ்நாட்டை சேர்ந்த ரசிகர்கள் கொதித்து எழுந்தனர்.
சுதிப்தோ சென் இதற்கு முன்பு இயக்கிய “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் மத நல்லிணக்கத்திற்கு எதிராக மத வெறுப்பை பரப்பும் வகையில் இத்திரைப்படம் அமைந்துள்ளதாக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அதே இயக்குனர் இயக்கவுள்ள “சஹாராஸ்ரி” திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்க கூடாது என்று இணையத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது மட்டுமல்லாது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மற்றொரு திரைப்படத்திற்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஏ ஆர் ரஹ்மானை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
அதாவது கடந்த ஜனவரி மாதம் “காந்தி கோட்சே ஏக் யுத்” என்ற ஹிந்தி திரைப்படம் வெளிவந்திருந்தது. இத்திரைப்படம் கோட்சேவின் கொள்கைகளை நியாயப்படுத்துவது போல் இருப்பதாக கூறப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்தபோது பரவலாக அறியப்படவில்லை. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். “சஹாராஸ்ரி’ திரைப்படத்திற்கு எழுந்த கண்டனங்களை தொடர்ந்து “காந்தி கோட்சே ஏக் யுத்” திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததற்காக தற்போது இதற்கும் சேர்த்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதையும் படிங்க: கண்ட நாய்ங்க கூட எல்லாம் படுக்க கூடாது!.. ஹீரோயின்கள் குறித்து சர்ச்சை பதிலளித்த ரேகா நாயர்!..
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…