Cinema News
பாலிவுட்டில் விஜய் சேதுபதியால் வந்த குழப்பம்… மும்பைக்கு பறந்த நயன்தாரா பிரபலம்.!
ஹீரோ, வில்லன் மற்றும் கௌரவத் தோற்றம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கட்சிதமாக நடித்து தனது முத்திரையை பதித்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழைத் தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி என தற்போது மொழிகள் கடந்த நடிகராக மாறிவிட்டார்.
பாலிவுட்டில் ஏற்கனவே சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பை கார் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். தற்போது, பாலிவுட் முன்னணி கதாநாயகி கத்ரீனா கைஃப்புடன் இணைந்து ‘மேரி கிறிஸ்மஸ்’ எனும் திரைப்படத்தில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்பொது, அது பாலிவுட் திரைப்படமாக இருந்தாலும் அதில் விஜய் சேதுபதி தமிழில் தான் பேசி நடிக்கிறாராம். அதாவது, படத்தின் கதைகளும் படியே விஜய் சேதுபதி தமிழ் பையனாகவும் கத்ரீனா கைஃப் மும்பையைச் சேர்ந்த பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதலால், வசனமும் தமிழிலேயே பேசி வருகிறாராம் இதனை புரிந்து கொண்டு கத்ரீனா கைஃப் நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் கத்னா கைஃப்புக்கு புரியவில்லையாம், ஆதலால் பட குழு புதிய ஐடியாவை கையாண்டுள்ளது.
இதையும் படிங்களேன்- 80களில் கொடிகட்ட பறந்த சூப்பர் ஹிட் ஹீரோயினுக்கு பேருதவி செய்த சிவகார்த்திகேயன்.
அதாவது, தமிழ் சீரியல்கள் மூலம் புகழ்பெற்று நயன்தாராவின் பெரும்பாலான படங்களில் நயன்தாராவுக்கு டப்பிங் குரல் கொடுத்து புகழ்பெற்ற தீபா வெங்கட், இதற்காக மும்பை சென்று உள்ளாராம். அங்கு சென்று, விஜய் சேதுபதி தமிழில் பேசும் வசனங்களை கத்ரீனா கைஃப்புக்கு மொழிமாற்றம் செய்து வருகிறாராம். மேலும், கத்ரீனா கைஃப்புக்கு தமிழும் கற்றுக் கொடுத்து வருகிறாராம். இந்நிலையில், அவர்தான் கத்ரீனா கைஃப் புக்கு தமிழ் டப்பிங் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.