Connect with us
vijay

Cinema News

மக்கள முட்டாள்னு நினைச்சாரா? கொள்கையை சிதைச்சு சீரழிக்கும் விஜய்! யாரு கேட்பா?

தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது நடிகர் விஜயின் அரசியல் வருகையை பற்றி தான். சினிமாவில் தனக்கான ரசிகர்களின் பலத்தை வைத்துக் கொண்டு விஜய் இந்த மாதிரியான அரசியல் நகர்வை எடுத்திருக்கிறார் என்று பெரும்பாலானோர் கூறிவருகிறார்கள்.ஆனால் அந்த மாதிரி எண்ணத்தில் வந்தால் அது மிகப்பெரிய தவறு என்றும் சில ஆலோசனை கூறுகிறார்கள்.

ஏனெனில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 7 கோடி  மக்கள் இருக்கும் பட்சத்தில் விஜயின் ரசிகர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும். இதையெல்லாம் விஜய் சிந்தித்தாரா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அன்று அந்த விழாவில் விஜய் பேசியது பேசு பொருளாகவும் மாறியுள்ளது. அதாவது பெரியார், அம்பேத்கார், காமராஜர் போன்றோரை படிங்கள் என்று சொல்லும் விஜய் இவர்கள் அனைவரும் மது, புகை இவற்றிற்கு முற்றிலுமாக எதிரானவர்கள் என்பதை அறிந்தாரா என்பது தெரியவில்லை.

vijay1

vijay1

ஏனெனில் லியோ பட போஸ்டர் வெளியாகி அடுத்த மூன்று நாள்களில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் புகைப்பிடிப்பது  போன்று போஸ் கொடுத்திருந்தார் விஜய். ஆனால் விழாவில் பெரிய நல்லவராட்டும் அதை செய்யுங்கள் , இதை செய்யுங்கள் என்று நாடகமாடினார். ஏற்கெனவே இனிமேல் படங்களில் மது, புகை இவற்றையெல்லாம் காட்ட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த விஜய் லியோ படத்தில் மறந்தாரா? இதையே அவரால் செய்யமுடியவில்லையே? அப்புறம் எப்படி மக்களுக்கு கொடுக்கப் போகும் வாக்குறுதியை காப்பாற்றுவார்.

மேலும் தமிழ் மக்கள், தமிழினம் என பேசும் விஜய் தன்னுடைய லியோ பட போஸ்டரில் தலைப்பை ஆங்கிலத்தில் தானே வெளியிட்டிருக்கிறார். பொதுவாக லோகேஷின் படங்கள் பெரும்பாலும் முதலில் இருந்து கடைசி வரை ஆங்கிலத்தில் தான் கார்டில் இருக்கும். இதையாவது மாற்றியிருக்கலாமே?

vijay2

vijay2

பெரியார், அம்பேத்கார், காமராஜர் இவர்களை பற்றி படிக்க சொன்ன விஜய் முதலில் அவரே இனிமேல் தான் படிக்க போகிறார். ஏனெனில் அதுவும் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே. எல்லாம் வாய் பேச்சிலேயே சவடால் விடுகிறார். யாரை ஏமாற்றப் பார்க்கிறார் விஜய்? மேலும் அவரின் கொள்கைகள் எது என்பது இந்த போஸ்டர், டைட்டில் கார்டு இவற்றிலிருந்தே தெரிகிறது. ஆனால் அதைப் பற்றி மீடியாவோ பத்திரிக்கையோ குரல் கொடுத்ததா? அன்புமணி ராமதாஸ் மட்டுமே இதை எதிர்த்துப் பேசினார். எல்லாம் எங்கு கொண்டு போய் முடிக்க போகுதோ என இந்த தகவலை பிரபல திரை விமர்சகர் ராமானுஜம் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top