Connect with us

Cinema News

“மனச புண்படுத்திட்டீங்க”… சிக்கலில் ஆதிபுருஷ்… குழப்பத்தில் படக்குழு…

பிரபாஸ், கிரீத்தி ஷெனான், செயிஃப் அலிகான் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் “ஆதிபுருஷ்”. இத்திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக வெளிவருகிறது. ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

“ஆதிபுருஷ்” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டீசரை பார்த்து இணையத்தில் பலரும் “கார்டூன்” திரைப்படம் போல் உள்ளதாக கேலி செய்துவருகின்றனர்.

ஏற்கனவே இத்திரைப்படத்தை நெட்டிசன்கள் கேலிக்குள்ளாக்கி வரும் நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதாவது “ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசரை பார்க்கும்போது அத்திரைப்படத்தில் பல ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதாக தெரியவருகிறது.

அனுமன் தோலால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கிறார். இதில் காட்டப்பட்ட இந்து தெய்வங்களின் உடைகள் மற்றும் தோற்றம் ஆகியவை மிகவும் தவறாக உள்ளது.

இது போன்ற காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகளாக இருக்கிறது. ஆதலால் இந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கவேண்டும் என இத்திரைப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது போன்ற காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதே போல் “ஆதிபுருஷ்” திரைப்படத்திற்கு மற்றொரு இடத்தில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதாவது “இந்த டீசரில் ஹிந்து கடவுள்களை தவறாக காட்டுகிறார்கள். ஹனுமன் கடவுளை முகலாயர்கள் போல் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

ராவணனாக காட்டப்படும் செயிஃப் அலிகான் கூட அலாவுதின் கில்ஜி போல் தோற்றமளிக்கிறார். இது கோடானு கோடி இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது” என ஒரு குறிப்பிட்ட மத அமைப்பு இயக்குனர் ஓம் ராவத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வாறு எங்கு திரும்பினாலும் எதிர்ப்புகளை சந்தித்து வருவதால் “ஆதிபுருஷ்” படக்குழு மிகவும் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

google news
Continue Reading

More in Cinema News

To Top