இதெல்லாம் ஒரு தலைப்பா!.. ரஜினியிடம் முகம் சுழித்த கமல்!.. எந்த படத்துக்கு தெரியுமா?..
ஒரு திரைப்படத்திற்கு முகவரி போல இருப்பது அப்படத்தின் தலைப்புதான். அதனால்தான் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் இயக்குனர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தலைப்பு காரணமாக ஓடிய திரைப்படங்கள் கூட இருக்கிறது. தலைப்பு சரியில்லாமல் ஓடாத படங்களும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் படங்களுக்கு பின் ரஜினி பட தலைப்புகள் எப்போதும் கவனம் பெறும். ரஜினியும் அதில் அதிக கவனம் செலுத்துவார். அவரின் மாவீரன், பணக்காரன், வேலைக்காரன், பாட்ஷா, படையப்பா, தளபதி என அவரின் பல திரைப்படங்களில் தலைப்புகள் ரசிகர்களை கவர்ந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரே திரைப்படம் தளபதி. இப்படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ரஜினியின் நண்பராக மம்முட்டி நடித்திருப்பார். இந்த படத்தில் ரஜினி பேசும் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து பல திரைப்படங்களில் மற்ற ஹீரோக்களும் பேசியுள்ளனர்.
இப்படம் உருவாகிக்கொண்டிருந்த போது தலைப்பு என்னவென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படவில்லை. அந்த சமயத்தில் ஒரு விழாவில் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘தளபதி’ என கமலிடம் கெத்தாக சொன்னாராம் ரஜினி. ஆனால், கமலின் காதில் அது ‘கணபதி’ என விழுந்துள்ளது. இதென்ன தலைப்பு...கம்பீரமாகவே இல்லையே’ என கமல் முகம் சுழித்துள்ளார்.
என்னடா கமல் இப்படி சொல்கிறரே என ரஜினி யோசித்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து அந்த தலைப்பை மீண்டும் ரஜினி கூற ‘தளபதி’ நல்ல தலைப்பு. கம்பீரமாக இருக்கிறது என கமல் சொன்னாராம்.
இதையும் படிங்க: உனக்கு பரந்து விரிஞ்ச மனசு பாப்பா!.. டைட் உடையில் கும்முன்னு காட்டும் ஹனிரோஸ்…