Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் எபிசோட் தொடங்க இருக்கும் நிலையில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த ஸ்பெஷல் அப்டேட் வெளியாகிவிட்டது.
இந்த சீசனிலும் முதலில் ரக்ஷன் தான் தொகுப்பாளராக வர இருந்த நிலையில் அவர் படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக OG ஆங்கர் என்ற அடையாளத்துடன் மாகாபா ஆனந்த் கலந்துக்கொண்டு இருக்கிறார்.
டபுள் போட்டியாளர்கள் என்பதால் இந்த முறை தொகுப்பாளரும் ஜோடியாக வந்துள்ளனர். அதற்காக ஐந்தாவது சீசன் போட்டியாளராக இருந்த சோயா வந்து இருக்கிறார். மேலும் நான்காவது நடுவராக ரோஜா களமிறங்கி இருக்கிறார்.
கடந்த சீசன் போல மூன்று நடுவர்களான தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌஷிக் வந்துள்ளனர். போட்டியாளர்களாக சின்னத்திரை நடிகர்களான சங்கீதா , அரவிந்த் சிஜூ, கிரிக்கெட் வர்ணனையாளரான அனிருத் மற்றும் மாடல் சம்யுக்தா கலந்துள்ளனர்.
காமெடி நடிகையான நிஷா – அவர் கணவர் ரியாஸ் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பட்டிமன்ற பேச்சாளரான மஞ்சுநாத் ராஜேஸ்வரி மற்றும் சோஷியல் மீடியா பிரபலமான சாந்தா மகேந்திரன், டிராவி மற்றும் ராஜி கலந்துக்கொள்ள இருக்கின்றனர்.
இந்த முறை சமையல் டாஸ்குகளும் வித்தியாசமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் கோமாளிகளில் குரோஷியை தவிர மற்ற எல்லாருமே அதே முகங்கள் தான் என்பதால் காமெடிக்கு யோசிக்க கூட செய்யலாம்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…