Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில் OG ஆங்கர் ஒருவர் புதிதாக வர இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் அவர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத வரவேற்பு சமையல் நிகழ்ச்சிக்கு உண்டு. அந்த வகையில் முதல்முறையாக காமெடியை இணைத்து ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 செம ஹிட் அடித்தது.
முதல் சீசன் தொடங்கி அடுத்தடுத்த சீசன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நான்கு சீசன் வரை ஹிட்டடித்த நிலையில் ஐந்தாவது சீசன் பெரிய சிக்கலில் சிக்கியது. தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். அவர்களை தொடர்ந்து நடுவர் வெங்கடேஷ் பட்டும் வெளியேற நடுவர் தாமு மட்டும் அந்த நிகழ்ச்சியிலேயே தொடர்ந்தார்.
ஆனால் ஐந்தாவது சீசன் பெரிய பிரச்சனையை சந்தித்தது. பாசிட்டிவ் மட்டுமே இருந்த நிகழ்ச்சிக்குள் முகம் சுழிக்க செய்யும் காமெடிகள் கடுப்பை கிளப்பியது. தன்னுடய வேலையில் தலையிடுகிறார் என தொகுப்பாளினி மணிமேகலை நேரடியாக பிரியங்கா மீது பழி சொல்லி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் கடைசியில் பிரியங்காவிற்கே டைட்டிலை கொடுத்தார்கள்.
தொடர்ந்து கடந்த சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை பெரிய சிக்கலை உருவாக்கியது. இந்நிலையில் வரும் சீசனில் இதுவரை பிரச்சனையே இல்லாமல் வருமா என எதிர்பார்த்து இருந்த நிலையில் மொத்த கான்செப்ட்டை மாத்தி ஜோடியாக போட்டியாளர்கள் களமிறக்க இருக்கின்றனர்.

மேலும், நான்காவது நடுவராக ரோஜா வர இருக்கிறார். மேலும் தற்போது தொகுப்பாளர் ரக்ஷனுக்கு பதில் OG ஆங்கர் மாகா பா ஆனந்த் இந்த முறை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.





