More
Categories: Cinema News latest news

எனக்கு வரப்போற புருஷனுக்கு அது மட்டும் இருந்தா போதும்!.. டான் நடிகையின் பேராசை!..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்குள் வந்த சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அங்கேயே பாயை போட்டு படுத்து விட்டார்.

குக் வித் கோமாளியின் இரண்டாவது சீசனில் அஸ்வின் குமாருடன் இவர் போட்ட ஆட்டங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பை பெற்றுத் தந்தன.

Advertising
Advertising

குக் வித் கோமாளி செட்டை தனது தாய் வீடாக மாற்றிக் கொண்ட சிவாங்கி தற்போது மூன்றாவது சீசனிலும் அங்கேயே வார வாரம் வித விதமான கெட்டப்புகளை போட்டு காமெடி பண்ணுகிறேன் என்கிற பெயரில் கடுப்பேட்டி வருகிறார்.

விஜய் டிவிக்கு வந்தாலே வே டு சினிமா என்பது போல ஏகப்பட்ட பிரபலங்களுக்கு நடிக்க வருகிறதோ இல்லையோ வாய்ப்பு மட்டும் குவிகிறது. அப்படியொரு ஜாக்பாட் தான் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் சிவாங்கிக்கு அடித்தது.

ஹீரோயின் பிரியங்கா மோகனுக்கு தோழியாகவும், ஹீரோ சிவகார்த்திகேயனை ஒன் சைடாக ஜொள்ளு விடும் கதாபாத்திரத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருந்தார்.

அந்த படத்தை பார்த்து விட்டு அதற்கு பிறகும் யாரும் சிவாங்கியை படங்களில் புக் பண்ணால் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம் என நெட்டிசன்கள் கலாய்க்க மீண்டும் விஜய் டிவி செட்டுக்கே திரும்பி விட்டார் சிவாங்கி.

ஆனால், சிவாங்கிக்கு ஆன்லைனில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதை யாராலும் மறக்க முடியாது. சிவாங்கியின் அழகான வாய்ஸ்க்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், தனது ரசிகர்களுடன் சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவாங்கி.

ரசிகர்களின் கேள்விக்கு சிவாங்கி பதில் அளித்து வந்த போது ஒரு ரசிகர், உங்களுக்கு என்ன மாதிரியான ஹஸ்பன்ட் வரணும்னு எதிர்பார்க்கிறீங்க என கேட்க, “மனசுல அழகா இருக்கணும்” அது போதும் என பெரிய மனதுடன் சொல்லி இருக்கிறார் சிவாங்கி.  என்ன சிவாங்கி இவ்வளவு பேராசை படுகிறார். இந்த காலத்துல அழகான பையன் கூட கிடைச்சிடுவான் ஆனால், மனசு சுத்தம் உள்ளவன் கிடைப்பானா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

மேலும், சிவாங்கி நீங்க அழகாயில்லைன்னு நினைச்சி தானே இப்படி மனசுல அழகா இருக்கணும்னு சொல்றீங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். சிவாங்கியின் பெரிய மனசு யாருக்கு வரும் என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts