More
Categories: latest news television

ஜெண்டர் ரிவீல் பார்ட்டி நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்!.. இர்பான் நிலைமை இப்போ என்ன தெரியுமா?

விதவிதமான உணவுகளை சாப்பிட்டு பல்வேறு ஓட்டல்களுக்கு சென்று விமர்சனங்கள் அளித்து வந்த யூடியூபர் இர்பான் பிரபலமாக தொடங்கிய நிலையில், தனது வீட்டில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் வீடியோவாக வெளியிட்டு வியூஸ் அள்ள ஆரம்பித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் ஐந்து நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றுள்ள இர்பான் தொடர்ந்து தனது யூடியூபிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வொர்த்தா ஃபுட் சீரிஸ் என்னும் நிகழ்ச்சியை யூடியூபில் நடத்தியவர் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவாங்கி, பிக் பாஸ் மாயா உள்ளிட்ட பல பிரபலங்களை அழைத்து வந்து ஒவ்வொரு கடைக்கா ஏறி இறங்கி குறைந்த விலை முதல் அதிக விலை வரை விற்கப்படும் பானிபூரி, ஐஸ்கிரீம், சிக்கன் 65 என பல்வேறு உணவு வகைகள் பற்றி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: பால்ல செஞ்ச கொழுக்கட்ட மாதிரி இருக்க!.. பளிச் அழகில் தூக்கத்தை கெடுக்கும் நிகிலா விமல்…

இந்நிலையில், கடந்தாலும் திருமணமான இர்பானின் மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ள நிலையில், தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாலினம் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் துபாய்க்கு சென்று அதை அறிந்து வந்தார்.

அதை வைத்து சென்னையில் தனது இவர்களுடன் மாயாவும் பங்கேற்ற ஜெண்டர் ரிவில் பார்ட்டி ஒன்றை நடத்தி அதன் வீடியோவை சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியிட்டார். தற்போது அதற்கு எதிராக தமிழ்நாடு மருத்துவத்துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையும் படிங்க: இந்தியன் 2 விழாவுக்கு நோ சொன்ன ரஜினி!.. இப்படி எல்லாம் யோசிப்பாரா சூப்பர்ஸ்டார்?!..

அந்த நோட்டீஸை தொடர்ந்து இர்பானுக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு தனது வீடியோவையும் நீக்கிவிட்டார். மேலும், மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என மருத்துவத்துறை சார்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

பணம் இருந்தால் அவர்களுக்கு சாதகமாகத்தான் அரசு செயல்படும் என்றும் சாமானியர்கள் என்றால் இந்நேரம் கம்பி எண்ணி இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் இர்பானுக்கு எதிராக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்க்கு பதிலா கார்த்திக் நடிச்சா நல்லா இருக்கும்! வினியோகஸ்தர்கள் வாங்க மறுத்த விஜய் படம்

Published by
Saranya M