
television
குக் வித் கோமாளி புகழுக்கு எப்போ கல்யாணம் தெரியுமா? அவரே வெளிப்படையா சொல்லிட்டாரே!
குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் புகழ். அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள புகழ் மேலும், பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் குக் வித் கோமாளியை மடக்கி சில யூடியூப் சேனல் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கலகலப்பாக பதில் அளித்துள்ளார் புகழ்.
டான் படத்தில் உங்க தங்கச்சி சிவாங்கி நடிச்சிருக்காங்களே உங்களுக்கு எப்படி ஃபீல் ஆச்சு என்கிற கேள்விக்கு, தங்கச்சி சிவாங்கி சில்வர் ஸ்க்ரீன்ல கலக்கிட்டாங்க, ரொம்பவே பெருமையா இருக்கு என்றார்.
நீங்களும் சிவாங்கியும் எப்போ ஒன்றாக சேர்ந்து நடிக்கப் போறீங்க என்கிற கேள்விக்கு பதில் அளித்த புகழ், விரைவிலேயே இருவரும் இணைந்து வெள்ளித்திரையில் அண்ணன் தங்கச்சியாக நடிப்போம்னு நம்புறேன். அதற்கான கதை அமைந்து யாராவது வாய்ப்பு கொடுத்தால் பண்ண ரெடி என மனதில் பட்டதை ரொம்பவே வெளிப்படையாய் பேசினார் புகழ்.
மேலும், உங்கள் திருமணம் எப்போது தான் பாஸ் நடக்கப் போகுது கொஞ்சம் சொல்லுங்களேன் என அவரது காதை லேசாக கடிக்க, அதற்கான ஏற்பாடுகளும் ஒரு சைடில் போயிட்டே இருக்குதுங்க, இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக திருமணம் பண்ணிடுவேன்னு புகழ் உறுதியாக கூறியுள்ளார்.
புகழ் இப்படி தனது திருமணம் குறித்து கன்ஃபார்ம் பண்ணி உள்ள நிலையில், குக் வித் கோமாளி மற்றும் புகழ் ரசிகர்கள் பலரும் அவருக்கு இப்பவே வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
சீக்கிரமே தமிழ் சினிமா பிரபலங்கள் பங்கேற்கும் அளவுக்கு பிரம்மாண்டமான திருமணத்தை நடத்த புகழ் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.