என்னது குக் வித் கோமாளி புகழை நிகழ்ச்சியில் இருந்து தூக்கிட்டாங்களா.?! புயலை கிளப்பிய டிவீட் இதோ.!

விஜய் டிவியில் உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் மனதை அதிகமாக கொள்ளையடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி. இன்றளவும் இனி வரும் காலங்களிலும் பலரது டென்சனை குறைத்து அவர்களை மனதார சிரிக்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதில், முக்கிய தூண்கள் என்றால் அது அங்கு நிரந்தரமாக இருக்கும் கோமாளிகள் தான். அதிலும், புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா ஆகியோரின் காமெடி கலாட்டா இன்னும் எத்தனை முறை வேண்டுமானால் பார்க்கலாம். தற்போது புதியதாக வந்துள்ள குரோஷியும் நன்றாக என்டேர்டைன் செய்கிறார்.

இதில் புகழ் மட்டும் மற்றவர்களை விட உயரம் தொட்டுவிட்டார் என்றே கூறவேண்டும். புகழ் சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் ஒரு காட்சியில் வந்திருப்பார்.

இதையும் படியுங்களேன் - வாழ்க்கை இழந்தவர்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளல் எங்கள் ஜெயம் ரவி.! என்ன காரியம் செய்தார் தெரியுமா.?!

இவர் இன்று காலை ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், நான் என்றும் தோற்றுப்போவதில்லை. வெற்றி வந்தால் ஏற்றுக்கொள்கிறேன். தோல்வி வந்தால் கற்றுக்கொள்கிறேன். என பதிவிட்டு இருந்தார். இந்த வாரம் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் பங்கு பெறவில்லை. அதனால், இணையவாசிகள், புகழ் பதிவிட்ட டீவீட்டையும், குக் வித் கோமாளி இந்த வார நிகழ்ச்சியையும் பார்த்து ஒரு வேலை புகழை தூக்கிட்டாங்க போல என பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் படத்தில் சூரியுடன் இணைந்து காமெடி செய்துள்ளார் புகழ். மேலும் சில பட வாய்ப்புகள் வருவதால் ஒரு வேளை புகழ் , குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடரமுடியாமல் கூட போகலாம் என்கின்றனர் சிலர்.

 

Related Articles

Next Story