பாவம் சும்மா விடுமா? டல்லடிக்கும் குக் வித் கோமாளி சீசன் 6… யாரும் கண்டுக்காத பரிதாப நிலை!

cook with comali
Cook With Comali: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 6 குறித்த புரோமோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வரும் நிலையில் ரசிகர்கள் கண்டுகொள்ளாமல் காற்று வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது.
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் மிகவும் புகழப்பட்டது கோமாளி. முதல் நான்கு சீசன்கள் ரசிகர்கள் ஒவ்வொரு எபிசோடையும் நேரம் தவறாமல் பார்த்து அதை கொண்டாடி தீர்த்து வந்தனர். இதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியின் நடுவர் மற்றும் கோமாளிகள் தான்.
ஆனால் கடந்த சீசன் இதற்கு பெரிய இடி விழுந்தது. பிரபல நடுவரான செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு பெரிய அளவு அதிர்ச்சியை கொடுத்தது. அவரை தொடர்ந்து தானும் வெளியேற இருப்பதாக செஃப் தாமோவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ஆனால் ஒரு சில மணி நேரங்களில் அந்த வீடியோ நீக்கப்பட்டு அவர் மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்வதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து சில புதிய கோமாளிகள் உள்ளே வந்து நிகழ்ச்சியின் மீது ஆர்வத்தை கெடுக்க தொடங்கினர்.
அதுவரை எந்தவித எதிர்மறை விமர்சனங்களும் வாங்காமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களால் அதிகமாக புகழப்பட்டு வந்தது. ஆனால் புது கோமாளிகள் காமெடி செய்யாமல் ரசிகர்களை கடுப்பேற்றினர். புது நடுவராக வந்த மாதம்பட்டி ரங்கராஜ் பல இடங்களில் ரோபோவாக பதில் சொல்லி எரிச்சலை ஏற்படுத்தினார்.
இதனால் கடந்த சீசனையே டல்லடித்து வந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் தொடங்கப்பட இருப்பதாக புரோமோக்கள் வெளியாகி வருகிறது. இதற்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆர்வம் இல்லாமல் இருப்பதால் தற்போது மூன்றாவது ஒரு நடுவரும் வர இருப்பதாக ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.
அவர் வேறு யாரும் இல்ல. மேட் செஃப் என சொல்லப்படும் கௌஷிக். இவர் ஏற்கனவே ஒரு சில எபிசோடுகளில் வந்திருக்கிறார். இவருக்கு பெரிய அளவில் காமெடி செட்டாகாது என்பதால் இந்த சீசனும் ரசிகர்களிடம் கண்டிப்பாக எரிச்சலை தான் ஏற்படுத்தும்.
கடந்த சீசனில் தொகுப்பாளனியாக இருந்த மணிமேகலை அங்கிருந்து அவர்களால் கட்டம் கட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் தற்போது ஜீ தமிழில் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் இங்கு நிலையோ தலைகீழாக மாறியிருப்பது என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
சம்மந்தம் இல்லாத சில முகங்கள் வேறு கோமாளிகளாக வர இருப்பதால் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.