கொஞ்சம் நஞ்சம் இருக்க மானத்தையும் காலி பண்ண வரும் குக் வித் கோமாளி6… இவரெல்லாம் ஆங்கரா?

by Akhilan |   ( Updated:2025-03-31 03:24:43  )
கொஞ்சம் நஞ்சம் இருக்க மானத்தையும் காலி பண்ண வரும் குக் வித் கோமாளி6… இவரெல்லாம் ஆங்கரா?
X

cook with comali

Cook With Comali6: விஜய் தொலைகாட்சியின் மாஸ்டர் பீஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கியமாக இருந்த குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் வேலைகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளது.

ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி பலரின் மன அழுத்தத்தை போக்க காரணமாக இருக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு ஒரே பதிலாக அமைந்தது தான் குக் வித் கோமாளி. முதல் நான்கு சீசன்களில் அந்த நிகழ்ச்சியை வாரம் தவறாமல் பார்க்கும் ரசிகர்கள் இருந்தனர்.

ஒரு குக்கிங் ஷோவை பார்த்து சிரித்து விழந்தவர்களை பார்க்கும் போது சூப்பர் ஷோ இனி விஜய் டிவி டிஆர்பியில் கல்லா கட்டும் என்றனர். ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கியதில் இருந்தே அதிர்ச்சி தகவல்கள்தான். முதலில் முக்கிய நடுவரான வெங்கடேஷ் பட் வெளியேறினார்.

அவருக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் உள்ளே வந்து ரோபோவை விட மோசமாக காமெடி செய்தார். அது மட்டுமல்லாமல் அதுவரை காமெடியாக இருந்த விஷயங்கள் கடுப்பாக மாறியது. மட்டமாக சில போட்டியாளர்களும் பேசிக்கொள்ள நிகழ்ச்சி அதன் ரசிகர்களை இழந்தது.

தொடர்ந்து பைனாலேவில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அதற்கு நிகழ்ச்சிக்குள் இருந்த போட்டியாளரான விஜய் டிவியின் தொகுப்பாளர் என்ற காரணமும் கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் அவரை பிரித்து மேய்ந்தனர்.

#image_title

விஜய் பிரபலங்கள் மணிமேகலைக்கு எதிராகவும் பிரியங்காவுக்கு ஆதரவாக பேச அதையும் பலர் கலாய்த்து வந்தனர். இது மட்டுமல்லாமல் தற்போது நடுவராக இருக்கும் மாதம்பட்ட் ரங்கராஜ் வேறு ஒரு விவாகரத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்நிலையில் குக் வித் கோமாளியின் ஆறாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட வேலைகள் நடந்து வரும் நிலையில் முதல் எபிசோட்டின் ஷூட்டிங் ஏப்ரல் கடைசியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுப்பாளராக ஜாக்குலின் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனியர் கோமாளியாக இருக்கும் புகழை களமிறக்க முடிவெடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் குக்காக ஜாக்குலின், பவித்ரா உள்ளிட்ட பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் உள்ளே வர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதுகுறித்த அப்டேட் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story