குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொள்ளும் பிரபலங்கள் இவங்களா? வெளியான லிஸ்ட் இதோ....!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒரு சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து மக்கள் ரசிக்கும் விதமாக இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருப்பதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள். இதுவரை இரண்டு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாம்.
கடந்த சீசனில் அஷ்வின், ஷகீலா, பவித்ரா, தர்ஷா குப்தா என பல பிரபலங்கள் குக்குகளாக கலந்து கொண்டனர். புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலா ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர். அந்த சீசன் மூலமே அஷ்வின், தர்ஷா ஆகியோர் பிரபலமாகி தற்போது படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனுக்கான போட்டியாளர் தேர்வு நடைபெற்று வருகிறதாம். அதன்படி போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வ லிஸ்ட் கிடையாது எல்லாம் ஒரு கணிப்பு மட்டுமே. இருப்பினும் இவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
அதன்படி இந்த சீசனில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா, நடிகர் கருணாஸின் மனைவியும், பாடகியுமான கிரேஸ், பாடகர் அந்தோணிதாசன், சார்பட்டா பரம்பரை படம் மூலம் பிரபலமான நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ஷிவானி நாராயணன், நடிகை விதுலேகா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
அதே போல கோமாளிகளாக குரேஷி, மூக்குத்தி முருகன், பரத், சிவாங்கி, மணிமேகலை, பாலா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.