விருதுகளை குவித்து வரும் குக் வித் கோமாளி.! இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்சன், நடுவர்களாக வெங்கடேஷ் பட், தாமு , கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா என அனைவரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டனர்.

கடந்த சில வருடங்களாக விஜய் டிவி தனது சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்களில் எது சிறந்த சீரியல் , நிகழ்ச்சி, நடிகர்கள், தொகுப்பாளர்கள் என தேர்ந்தெடுத்து, விஜய் டெலிவிஷன் விருது வழங்கி வருகிறது.

இதையும் படியுங்களேன் - நடிப்பை விட்டு ஒதுங்கும் அஜித்.!? எந்த நாட்டில் செட்டில் ஆக உள்ளார் தெரியுமா.?

அந்த வகையில் சிறந்த நடுவர் கூட்டணியாக வெங்கடேஷ் பட், தாமு ஆகியோருக்கும் , சிறந்த தொகுப்பாளருக்கான விருது ரக்சனுக்கும், சிறந்த காமெடியனாக பாலாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளாராம். இதனை கொண்டாடும் விதமாக குக் வித் கோமாளி ரசிகர்கள் டிவிட்டரில் #CookWithComali3 என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story