Mansoor Alikhan: தமிழ் சினிமாவில் தனது வில்லத்தனத்தால் அனைவரையும் கட்டுக்குள் வைத்திருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் முதன் முதலாக தமிழில் அறிமுகமான மன்சூர் அலிகான் முதல் படத்திலேயே ரசிகர்களை மிரளவைத்தார். விஜயகாந்துக்கு இவர்தான் சரியான வில்லன் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.
அந்தளவுக்கு விஜயகாந்துக்கே ஈடு கொடுக்கும் வகையில் சண்டைக் காட்சிகளிலும் சரி வசனத்திலும் சரி பின்னி பிடலெடுத்தார். அந்தப் படத்திற்கு பிறகு மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து பல நல்ல படங்களின் வாய்ப்புகள் வரத்தொடங்கியது.
இதையும் படிங்க: அய்யா அட்லீ அந்த படத்தை சீக்கிரம் பண்ணுய்யா!.. விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. என்ன சொன்னார் தெரியுமா?..
நடித்த எல்லாப் படங்களிலும் வில்லனாகவே அதுவும் முரட்டு வில்லனாகவே நடித்து பார்க்கும் ரசிகர்களை கொலை நடுங்க வைத்தார். இந்த நிலையில் சமீபகாலமாக மன்சூர் அலிகான் குணச்சித்திர வேடங்கள் , நகைச்சுவை காட்சிகள் என எல்லா பரிணாமங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தயாரித்து வெளியாகும் படம் சரக்கு. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு திரைப்பிரபலங்கள் சில பேர் கலந்து கொண்டு மன்சூர் அலிகானை வாழ்த்தினார்கள். அப்போது வழக்கம் போல எல்லா மேடைகளிலும் வந்து கடுப்பினை ஏற்படுத்தும் கூல் சுரேஷும் இந்த விழாவிற்கு வந்தார்.
இதையும் படிங்க: கடனில் சிக்கி வீடு ஜப்தி!.. கண்ணதாசன் எழுதிய அந்த பாட்டு!.. கவிஞருக்கு இவ்வளவு சோகமா!..
மேடையில் மாலையோடு வந்த கூல் சுரேஷ் மன்சூர் அலிகானை பார்த்து ‘அண்ணன் மேல் எனக்கு சின்ன வருத்தம் இருக்கிறது. எல்லாருக்கும் மாலை போட்டு வரவேற்கும் நீங்கள் ஒருத்தருக்கு மட்டும் மாலை போட மறந்துவிட்டீர்கள் என்று சொல்லி அருகில் இருந்த தொகுப்பாளினி மீது ஆளுயர மாலையை போட்டுவிட்டார்’.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக நடந்த இந்த நிகழ்வால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்த தொகுப்பாளினியும் மிகுந்த கோபத்தில் இருந்தார். மேலும் விழாவிற்கு நன்றியுரை பேச வந்த மன்சூர் அலிகானிடம் மேடையின் கீழ் இருந்தவர்கள் இப்படி ஒரு பெண் மீது அநாகரீகமாக நடந்து கொள்கிறாரே? அவரை கண்டிக்க மாட்டீர்களா? என்ற குரல் எழும்பியது.
இதையும் படிங்க: கட்டுன புருஷன் அங்க கம்பி எண்ணுறான்.. உனக்கு போட்டோஷூட் கேக்குதோ!.. மகாலட்சுமியை விளாசும் ஃபேன்ஸ்!..
உடனே மன்சூர் அலிகான் கூல் சுரேஷுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்லி கூல் சுரேஷையும் வந்து அந்த தொகுப்பாளினியிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். மேலும் இந்த மாதிரி நடந்திருக்க கூடாது என்றும் கூல் சுரேஷ் எனக்கு தம்பி மாதிரிதான். இருந்தாலும் அவன் இப்படியெல்லாம் செய்திருக்க கூடாது என்றும் நானும் கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை என்றும் மன்சூர் அலிகான் வேதனையில் பேசினார்.
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…