விஜய் வேண்டானு சொன்னாலும் பக்க பலமா இருப்பேன்! இவர முதல்ல புடிங்கப்பா

by Rohini |
vijay 3
X

vijay 3

Actor Vijay:எந்த சேனலை எடுத்தாலும் அதில் விஜயின் அரசியல் கட்சி கொடியை பற்றிய செய்தி தான் ஹாட் நியூஸாக சென்று கொண்டிருக்கின்றது. நேற்று தனது கட்சி கொடியை அறிவித்த விஜய் நேற்று முதலே பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்.

தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சமூக ஆர்வலர் ஒருவர் கட்சி கொடியில் இருக்கும் சில முரண்பாடான சின்னங்கள் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ஊருக்குத்தான் உத்தமன்! திருமணத்திற்கு பிறகு பட்ட வேதனைகளை பகிர்ந்த சங்கீதா

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தவெக கட்சி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. கொடியில் பயன்படுத்திய சின்னம் குறித்து தேர்தல் ஆணையத்தில் இருந்து கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்க தயார் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பத்திரிகை நிருபர்களும் எந்த பிரபலங்களை பார்த்தாலும் அவர்களிடம் கேட்கும் கேள்வி விஜய் பற்றியும் அவருடைய கட்சி கொடியை பற்றியும் தான். அப்படி ஒரு திரையரங்கில் படம் பார்க்க சென்ற கூல் சுரேஷிடம் விஜயின் அரசியல் கட்சி கொடியை பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த கூல் சுரேஷ் யானையாவது பூனையாவது விஜய் எப்போதும் வெற்றி அடைய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: தங்கலான்லாம் ஓரமா போ!. அடிச்சி தூக்கும் டிமாண்டி காலணி 2… அருள்நிதி செம ஹேப்பி!…

ஒரு பக்கம் விஜய் யானையாகவும் இருக்கிறார். இன்னொரு பக்கம் பூணையாகவும் இருக்கிறார் என குறிப்பிட்டு யோசிப்பதில் பூனையாகவும் பலத்தில் யானையாகவும் இருப்பதை கூறுகிறேன் என கூல் சுரேஷ் தெளிவு படுத்தினார். மேலும் அவருடைய கட்சியில் நான் கூட்டணி அமைக்க தயார் என்றும் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலை அவருடன் சேர்ந்து சந்திக்க விரும்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார் சுரேஷ்.

cool

cool

ஒருவேளை விஜயே என்னை நிராகரித்தாலும் வெளியில் இருந்து அவருக்கு பக்கபலமாக உறுதுணையாக நிற்பேன் என கூல் சுரேஷ் பதிலளித்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பேசாமல் தவெக கட்சியின் பிரச்சாரத்திற்கு கூல் சுரேஷை கூப்பிடுங்கப்பா. விஜய் தான் பேச மாட்டார். இவராவது பேசி ஓட்டுகளை சேகரிப்பார் என கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியராஜை பழிவாங்கிய சிவாஜி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!…

Next Story