ஆத்தாடி… இத்தனை மாசமா? கூலிக்காக ரஜினியையே இப்படியா படுத்துவீங்க லோகேஷ்..

Published on: August 21, 2024
---Advertisement---

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கும் நிலையில்,இப்படம் குறித்த மேலும் சில சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் ட்ரெண்டிங் இயக்குனர்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் லோகேஷ் கனகராஜ்.  இவர்  கார்த்தி, விஜய், கமல்ஹாசனை தாண்டி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் படிங்க: இவங்கள பாக்குறதுக்கு சும்மா இருக்கலாமே…பிக்பாஸ் சீசன் 8ல் மொத்தமா களமிறங்கும் விஜய் டீம்…

தலைவர் 171 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கூலி என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மிகப்பெரிய இடைவேளைக்கு பிறகு இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிகர் சத்யராஜ் இணைந்து நடிக்க இருக்கிறார். மேலும் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Coolie

முக்கியமாக இப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் இல்லாமல் தனிப்பட்ட வித்தியாசமான கதையாக அமைக்கப்பட இருப்பதாகவும் லோகேஷ் குறிப்பிட்டு இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது விசாகப்பட்டினத்தில் இன்று மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: தளபதி சும்மா போகலை… கொடுத்த ஆர்டர் அப்படி.. அண்ணன் மேல பாசமெல்லாம் இல்லையோ…

இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 160 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். விசாகப்பட்டினத்தில் மட்டுமே 40 நாட்களுக்கு  தொடர்ந்து சூட்டிங் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் ரிலீஸ் அடுத்த வருடத்தின் கடைசியில் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. 

பொதுவாகவே லோகேஷ் திரைப்படங்கள் போதை கடத்தல் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும். சமீபகாலமாகவே இதற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பு நிலவிவரும் நிலையில், கூலி படத்தில் அதையெல்லாம் விடுத்து தங்க கடத்தலுக்கு மாறி இருப்பதும் தற்போது விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.