நேத்து மலையாளம் இன்னைக்கு தெலுங்கா? கூலியின் இணைந்த உச்ச நட்சத்திரம்..

by Akhilan |   ( Updated:2024-08-29 12:48:23  )
நேத்து மலையாளம் இன்னைக்கு தெலுங்கா? கூலியின் இணைந்த உச்ச நட்சத்திரம்..
X

coolie

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படக்குழு குறித்த அப்டேட்கள் நேற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரு முக்கிய நடிகர் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பொதுவாகவே லோகேஷன் திரைப்படங்கள் எல்சியூ எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சை சார்ந்தே இயக்கப்பட்டு இருக்கும். ஆனால் முதல் முறையாக கூலி திரைப்படத்தை தனி படமாக எடுக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?

எப்போது போல இல்லாமல் இப்படத்தில் போதை பொருள் குறித்து எந்த காட்சிகளும் அமைக்கப்பட வில்லையாம். அதுபோல நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மும்முரமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு மல்டி ஸ்டார் கூட்டணிதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்திலும் மற்ற மொழி உச்ச நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது அடுத்து உருவாகி வரும் கூலி திரைப்படத்திலும் இதே டெக்னிக்கை தான் லோகேஷ் கனகராஜும் பயன்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் படக்குழு குறித்த அறிவிப்பு நேற்று முதல் தினமும் மாலை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மலையாளத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான ஷாபின் ஷாப்பீர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க: அப்போ பிக்பாஸ் இவர் தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..

மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்தவர் ஷாபின் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று கூலி திரைப்படத்தின் மற்றொரு நடிகராக தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான நாகார்ஜுனா இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இப்படத்தில் சைமன் என்ற கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

Nagarjuna

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சமீபத்திய திரைப்படங்களில்தான் வெளி மாநில பிரபலங்கள் தொடர்ந்து நடித்து வருவது அதிகரித்து வருகிறது. வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப் இணைந்த நிலையில் கூலி திரைப்படத்திலும் முன்னணி பாலிவுட் நடிகர் இணைவார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. அடுத்தடுத்த அறிவிப்புகளில் இது குறித்த தகவல் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story