ஸ்ருதிஹாசன் முதல் செளபீன் வரை… கூலி படத்தில் வாங்கும் சம்பளம் என்ன தெரியுமா?
Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் மல்டி ஸ்டார்கள் நடிக்க இருக்கும் நிலையில் அவர்கள் சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கி நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…
இப்படத்தில் உபேந்திரா, ஷோபீன் ஷாபீர், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இவர்களின் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் முதற்கட்டமாக நாகர்ஜூனாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.
ஸ்ருதிஹாசன் 5 கோடி சம்பளமாகவும், செளபீன் ஷாகீருக்கு 85 லட்சம் சம்பளமாகவும் கொடுக்கப்படுகிறதாம். அதுமட்டுமல்லாமல் உபேந்திராவுக்கு 8 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: எக்ஸில் மணிமேகலைக்கு குவியும் சப்போர்ட்… அசிங்கப்படும் விஜே பிரியங்கா…
லோகேஷ் கனகராஜின் கேரியரில் கூலி வித்தியாச படமாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனாலும், தங்க கடத்தல் சம்மந்தப்பட்ட கதையாகவும் கூலி இருக்கலாம் என்கின்றனர். இப்படத்தில் மல்ட்டி ஸ்டார் நடிகர்கள் மட்டுமல்லாமல் சத்யராஜும் இணைந்து நடிக்க இருக்கிறார்.
38 வருடங்களுக்கு பின்னர் ரஜினியின் படத்தில் சத்யராஜ் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் அனிருத் ரஜினியுடன் மூன்றாவது முறையாக தொடர்ந்து இணைவதால் ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் கசியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.