கூலி படத்தின் இசை யாருக்கு சொந்தம்?… இளையராஜாவுக்கே பல்ப் கொடுக்கும் சம்பவம்!
Coolie: ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பில் தன்னுடைய பாடலை என்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தி விட்டதாக இளையராஜா எழுதிய பிரச்சினைக்கு தற்போது ஒரு பெரிய தீர்வு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
வேட்டையன் படத்தை முடித்துக் கொண்டு விரைவில் ரஜினிகாந்த் லோகேஷ் இயக்க இருக்கும் கூலி படத்தில் இணைய இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. 80ஸ் ரஜினியை பிரதிபலிக்கும் விதமாக டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?
அந்த வீடியோவில் ரஜினி நடிப்பில் வெளியான தங்க மகன் படத்தில் இருந்த வா பக்கம் வா பாடலின் டிஸ்கோ இசை பயன்படுத்தப்பட்டிருந்தது.டைட்டில் ப்ரோமோ பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும் இளையராஜா அதற்கு எதிர்ப்பாக நோட்டீஸ் ஒன்றை கொடுத்து இருந்தார்.
தங்கமகன் படத்தில் தான் இசையமைத்த வா பக்கம் வா பாடலின் இசையை தன்னுடைய அனுமதி இல்லாமல் படக்குழு பயன்படுத்தி இருக்கிறது. இதற்கு தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் அல்லது அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் எதிராக இளையராஜா நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: சிவபெருமானாக வந்து பாடிய சிவாஜி… கண்களால் செய்த அந்த லீலை.. மனுஷன் மாஸ் காட்டியிருக்காரே!
இது சர்ச்சையான நிலையில் இதற்கு என்ன முடிவு எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது வந்த தகவலின்படி, வா பக்கம் வா பாடலின் உரிமையை எக்கோ நிறுவனமே வைத்திருந்ததாம். தற்போது அந்த நிறுவனத்தை sony மியூசிக் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாப்பாக பாடலை விற்று விட்டதால் இதற்கு இளையராஜாவால் உரிமை கொண்டாட முடியாத நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் மீண்டும் இளையராஜாவுக்கே நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளதையும் பார்க்க முடிகிறது.