Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் அப்டேட் ஒன்றால் ரசிகர்கள் இது அதுல என்ற ரீதியில் கலாய்த்து வருகின்றனர்.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா கேரியரில் பரபரப்பாக இயங்கி வருகிறார். அந்த வகையில், டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இதையும் படிங்க: மொத்தமா கலைச்சி விட்டாச்சுல… புறநானாறு படத்தில் இத்தனை மாற்றமா?
இதைத்தொடர்ந்து தற்போது கூலி திரைப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார். கோலிவுட்டின் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எப்போதும் போல அல்லாமல் இப்படம் லோகேஷின் மற்றுமொரு வித்தியாசப்படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் 38 வருடங்கள் கழித்து சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த படம் மங்காத்தா2 வா? வெங்கட் பிரபுவே சொல்லிட்டாரே!..
இந்நிலையில் சமீபத்தி கன்னட நடிகர் உபேந்திரா ராவ் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமீர்கான் இப்படத்தில் ஸ்பெஷல் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது.
ஜெயிலர் படத்தின் மல்டி ஸ்டார் கூட்டணி ரசிகர்களுக்கு பெரிய அளவில் பிடித்தமானதாக அமைந்ததால், இப்படத்திலும் அதே டெக்னிக்கை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இப்படத்தை ஜெயிலர் 2 என கலாய்த்து வருகின்றனர்.
