Connect with us
coolie 2

Cinema News

கூலி படத்தில் இணைந்த சூப்பர் நடிகை… எதிர்பார்க்கல இல்ல… இப்படி ஒரு சர்ப்ரைஸ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படத்தில் சத்யராஜ், கன்னட நடிகர் உப்பண்ணா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலகநாயகன் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியுடன் இவர் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தில் சுருதிஹாசன் ப்ரீத்தியாக நடித்துள்ளார் என்று லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

coolie

coolie

இதற்கான போஸ்டரில் அவர் ஒரு சீரியஸான முகபாவத்துடன் ஒரு மண்வெட்டியை பிடித்து ஒரு எளிமையான உடையில் தலைமுடியை பாதியாகக் கட்டியபடி வித்தியாசமான லுக்கில் காணப்படுகிறார். படத்தில் இணைந்தது குறித்து சுருதிஹாசன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இப்படத்தில் அவர் இணைந்ததால் ரசிகர்களுக்குக் கூடுதல் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. படத்தில் நாகர்ஜூனாஇ சௌபின் ஷாஹிர் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். இது ஒரு பெரிய பட்ஜெட் படம்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. படத்தின் ரிலீஸ் தேதி பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இது வழக்கமான லோகேஷின் எல்சியுவாக இருக்காது என்பதை அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடித்தார்கள். அவர்களை ரசிகர்களும் மிகவும் ரசித்தார்கள். இருவரும் நெருங்கிய நண்பர்கள். சினிமாவில் மட்டுமல்ல. சினிமாவுக்கு அப்பாலும் அப்படி ஒரு நட்பை வளர்த்து வந்தனர். அவர்கள் இருவரும் திரும்பவும் இணைந்து நடிக்க முடியாதபடி நிலைமை ஆகிவிட்டது.

ஏன்னா அவர்களுக்கு ஏற்ற கதை தேவை. பட்ஜெட்டும் தேவை. அதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். அந்தக் குறையைப் போக்குவம் வகையில் தற்போது ரஜினியுடன் கமலின் மகள் சுருதிஹாசன் இணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் புது உற்சாகத்தை உண்டாக்கி உள்ளது என்றே கூறலாம். அதனால் படத்திற்கு கமல் ரசிகர்கள் மத்தியில் இருந்தும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top