ஓவர் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு புஸ்ஸுனு போச்சே… கூலியில் இணைந்த அடுத்த பிரபலம்…

by Akhilan |
ஓவர் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு புஸ்ஸுனு போச்சே… கூலியில் இணைந்த அடுத்த பிரபலம்…
X

#image_title

Coolie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படக்குழு குறித்த அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்றைய நாளின் பிரபலம் குறித்த அப்டேட் தற்போது ரிலீசாகி இருக்கிறது.

ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரின் வேட்டையன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது கூலி திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் ஃபீவர் ஸ்டார்ட்!.. நாம போட்டோக்களை எறக்கணும்!.. அஜித்தை பங்கம் பண்ணிய பிரபலம்!…

இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவிலேயே ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இப்படத்தின் சூட்டிங் தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

பொதுவாக லோகேஷின் ஸ்டைலில் இப்படம் வேறொரு ஸ்டைலில் வித்தியாசமாக அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மற்ற படங்களின் எந்த சாயிலும் இந்த படத்தில் இருக்கக் கூடாது என்பதும் ரஜினிகாந்தின் முக்கிய கட்டளையாகவும் இருக்கிறதாம்.

Shruthi hassan

இந்நிலையில், கோட் திரைப்படத்தின் அப்டேட்கள் இணையத்தில் குதிந்து வரும் நிலையில், தங்களுடைய ஆதிக்கத்தை விடக்கூடாது என நினைத்த கூலி படக்குழு தினமும் ஒரு படத்தின் கேரக்டர் குறித்த போஸ்டரை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முதலில் மலையாள நடிகர் ஷாபீன் ஷாபீர் தயாள் என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: திரிஷ்யம் பிரபலமும் இப்படிதானா? ஊர்வசிக்கே பாலியல் சீண்டலால் சோதித்த இயக்குனர்…

ஏனெனில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ராவ் மற்றும் சிறப்பு பேமியூரில் அமீர்கான் நடிப்பதாக தகவல்கள் கசிந்திருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்றைய அப்டேட்டாக நடிகை ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Next Story