Cinema News
கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..
Coolie: நடிகர் ரஜினிகாந்த் நடித்த உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் மீண்டும் மல்டி ஸ்டார் கூட்டம் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அண்ணாத்த படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ரஜினிகாந்த் தான்.
இதையும் படிங்க: கஜினி படத்தினை மிஸ் செய்ததது இத்தனை ஹீரோக்களா? கல்பனா கேரக்டருக்கும் நோ சொன்ன நடிகை…
அதைத்தொடர்ந்து இன்னொரு காரணமாக அமையப்பட்டது மல்டி ஸ்டார் கூட்டணிதான். கன்னடாவில் இருந்து சிவராஜ்குமார், ஹிந்தியில் இருந்து ஜாக்கிஷெரஃப், மலையாளத்திலிருந்து மோகன்லால், தெலுங்கில் இருந்து சுனில் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் இதனால் தான் பெரிய வெற்றியை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் மஞ்சு வாரியர், ஃபகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இதே டெக்னிக்கை தற்போது கூலி படத்துக்கும் கையில் எடுத்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் 38 ஆண்டுக்கு பின்னர் நடிகர் சத்யராஜ் நடிக்க இருக்கிறார். மேலும், ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
இப்படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க கன்னட நடிகர் உபேந்திரா ராவ் நடிக்க இருக்கிறாராம். இவர் இதற்கு முன் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் தமிழுக்கு எண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ஆகஸ்ட் 25ந் தேதியில் இருந்து இந்த ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் படத்தின் எல்லா வேலைகளும் முடிந்துள்ள நிலையில், அப்படம் அக்டோபரில் ரிலீஸாக இருக்கிறது. இதை தொடர்ந்து வேட்டையன் படத்தின் ரிலீஸுக்கு அடுத்த வருட இறுதியை படக்குழு குறி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.