More
Categories: Cinema News latest news

கோரமண்டல் ரயில் விபத்தை அன்றே காட்டிய கமல்ஹாசன்… கலை இயக்குனர் பகிர்ந்த அரிய தகவல்…

கடந்த 2 ஆம் தேதி ஒடிசாவில் மிகவும் கோரமாக நடந்த ரயில் விபத்து இந்திய மக்களை ஸ்தம்பிக்க வைத்தது. அந்த நாளில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து சென்னை விரைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசா மாநிலம் பாலேஹார் என்ற இடத்தில் அங்கே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி தடம்புரண்டது. அதன் பின் அதற்கு அருகில் இருந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ஏற்கனவே தடம்புரண்டிருந்த ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளிவந்தன. மேலும் 700க்கும் அதிகமானோர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு தொடர்ந்து நடந்த ரயில் விபத்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertising
Advertising

அன்றே கணித்த கமல்

இந்த ரயில் விபத்தை தொடர்ந்து பலரும் இணையத்தில் கமல்ஹாசன் நடித்த “அன்பே சிவம்” திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியை போலவே இருந்ததாக கூறி வந்தனர். அதாவது “அன்பே சிவம்” திரைப்படத்தில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கமல்ஹாசனும் மாதவனும் கோரமண்டல் ரயிலில் திரும்பி கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டு அந்த ரயில் கவிழ்ந்துவிடும். தற்போது நடந்த ரயில் விபத்தை அன்றே கமல்ஹாசன் கணித்துவிட்டார் என்று இணையத்தில் பலரும் பரப்பி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் “அன்பே சிவம்” திரைப்படத்தின் கலை இயக்குனரான பிரபாகரன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்த விபத்து சம்பவத்தை படமாக்கியது குறித்து பகிர்ந்துகொண்டார். அதாவது பொள்ளாச்சிக்கும் கேரளாவுக்கும் நடுவே இருந்த ஒரு பகுதியில்தான் அனுமதி வாங்கி இதற்கான செட் போடப்பட்டதாம்.

செட்டுக்கான மெனக்கெடல்

ஒரு நிஜ தண்டவாளத்திற்கு அருகே இன்னொரு தண்டவாளம் செட் போடப்பட்டதாம். அதே போல் ரயில் பெட்டிகளையும் அதன் மேல் செட் போட்டு அந்த ரயில் பெட்டிகளை லாரியை வைத்து இடித்து கவிழ்த்தனராம். இவ்வாறு யதார்த்தமாக இருப்பது போல் அந்த காட்சியை படமாக்கினார்கள்.

அந்த காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தபோது அந்த வழியில் ஒரு ரயில் சென்றதாம். அந்த ரயிலை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் நிஜமாகவே ஒரு ரயில் விபத்து நடந்துள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டாராம். அதன் பிறகு அவர்களுக்கு ஷூட்டிங் நடப்பதாக புரியவைத்து அனுப்பினார்களாம். அந்த அளவுக்கு மிகவும் யதார்த்தமாக செட் போட்டிருந்தார்களாம்.

 

 

 

Published by
Arun Prasad

Recent Posts