மூச்சுக்குழாயில் ஏற்பட்ட திடீர் அடைப்பு… திணறிப்போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன்… இவ்வளவு ரிஸ்க்கா எடுக்குறது?

Kamal Haasan
உலக நாயகன் என்று புகழப்படும் கமல்ஹாசன், சினிமாவுக்காக தனது உயிரையே துச்சமாக கருதுபவர். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் செய்யும் மெனக்கெடல்களை கேள்விப்பட்டால் மிகவும் வியப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Kamal Haasan
“பாபநாசம்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சிக்காக கமல்ஹாசன் தனது மூக்கின் இரண்டு துவாரங்களிலும் பஞ்சு வைத்துக்கொண்டாராம். அப்போது அருகில் இருந்த நபர் ஒருவர் “சார், இப்படி பண்ணாதீங்க, மறந்துப்போய் வேகமா மூச்சை இழுத்தீங்கன்னா பஞ்சு மூச்சு குழாய்ல ஏறிடும்” என்று கூறினாராம்.
ஆனால் கமல்ஹாசன் அதை எல்லாம் சட்டை செய்யாமல் பஞ்சை வைத்திருக்கிறார். அந்த நபர் சொன்னபடி கமல்ஹாசன் மறந்துபோய் வேகமாக மூச்சு இழுக்க, அந்த பஞ்சு உள்ளே போய் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினாராம்.

Kamal Haasan
உடனே படக்குழுவினர் கமல்ஹாசனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மூக்குக்குள் இருந்த பஞ்சை வெளியே எடுத்தனராம். அதன் பின் மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்த கமல்ஹாசன், “என்னைய எல்லாரும் உலக நாயகன்னு சொல்றாங்க. என்ன பெரிய உலக நாயகன்?, வைகை அணை பக்கம் தண்ணி பாய்ச்சிக்கொண்டிருந்த ஆளு திடீரென ஆர்மனிய பெட்டியை தொட்டு அடிச்சார் பாருங்க மியூசிக், அவர்தாங்க இளையராஜா, அதுதாங்க சாதனை.
பெங்களுர்ல பஸ் கன்டெக்டர் வேலை பாத்துட்டு இருந்த ஆளு, திடீரென அந்த வேலை எல்லாம் தூக்கி போட்டு வந்துட்டு, இன்னைக்கு சூப்பர் ஸ்டாரா இருக்காரே, அதுதாங்க சாதனை. நான் உலக நாயகன்னு சும்மா சொல்லிக்க வேண்டியதுதான். நான் சினிமாவுல இருக்குறது என்ன பெரிய சிறப்பு. இவங்க எல்லாரும் இருந்தாத்தானே சிறப்பு” என அங்குள்ளவர்களிடம் கூறினாராம்.

Kamal Haasan
சிவாஜிக்கு பின் பல நடிகர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். அப்படிப்பட்டவர் இவ்வாறெல்லாம் புலம்பியிருப்பது வியப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ஆனாலும் பதற்றம் மட்டும் போகல… லிங்கா படப்பிடிப்பில் புலம்பித் தள்ளிய ரஜினிகாந்த்… என்ன காரணம் தெரியுமா??