நிம்மதி பெருமூச்சு விட்ட பிக் பாஸ் தர்ஷன்!.. ஒருவழியா அந்த தொல்லையில் இருந்து தப்பிச்சிட்டாரு!..

சமீபத்தில் கார் பார்க்கிங் தொடர்பாக நடிகர் தர்ஷனுக்கும் முன்னாள் நீதிபதியின் மகனுக்கும் ஏற்பட்ட தகராறில் தர்ஷன் மிது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தர்ஷன் மீது இருந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையை சேர்ந்த தர்ஷன் மாடலாக தன் கரியரை தொடங்கி பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களை நிறைவடைந்த நிலையில், இவர் இருந்த 3வது சீசன் அளவிற்கு இதுவரை எந்த சீசனிலும் யாரும் பர்ஃபார்ம் செய்யவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முகம் தெரியாத நபராக இருந்தாலும் தர்ஷனுக்கு ரசிகர்கள் ஆதரவளித்து வந்தனர். இவருக்கு பிக் பாஸில் கிடைத்த வரவேற்பிற்கு பிறகு பட வாய்ப்புகளும் கிடைத்தன.

பிக் பாஸை தொடர்ந்து தர்ஷன் தமிழில் லாஸ்லியாவுடன் கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நாடு என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
தர்ஷன் தற்போது சென்னையில் தங்கி படங்களை நடித்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு முன் காரை நிறுத்திய நீதிபதியின் மகனுடன் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்பு இரண்டு பேரும் போலீஸாரிடம் புகார் அளிக்க அவர்கள் தர்ஷனை மட்டும் கைது செய்துள்ளனர். ஒரு வாரம் சிறைத் தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார் தர்ஷன்.
முன்னாள் நீதிபதியின் மகன் ஆத்திச்சூடிக்கும் நடிகர் தர்ஷனுக்கும் ஏற்பட்ட சண்டையில் தர்ஷனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் தனது பக்கம் உள்ள நியாயத்தை தொடர்ந்து வாதிட்டு வந்த நிலையில் இன்று அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.