OTT Watch: ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் ஓடிடிடியில் வெளியாகி வருகிறது. அதில் இந்த வாரம் நீங்க மிஸ் பண்ணவே கூடாத ஒரு படமான கோர்ட் படத்தின் விமர்சனம் குறித்த தொகுப்புகள்.
கோர்ட் ஸ்டேட் vs நோபடி படத்தின் கதை 19 வயதாகும் சந்திரசேகர் 17 வயதாகும் ஜபிலியை காதலிக்கிறான். இவ பணக்கார வீட்டு பெண். சந்திரசேகரோ ஒரு காவலாளியின் மகன். அவளுடைய மாமா மங்கபதி ஒரு ஆதிக்க எண்ணம் பிடித்தவர்.
அவர்களின் உறவைக் கண்டுபிடித்து விடுகிறார். சந்திரசேகர் மீது போக்சோ சட்டம் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) உட்பட பல பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் தள்ளிவிடுகிறார். மங்கபதி தன் கௌரவத்திற்காக குடும்பத்தின் மீது செலுத்தும் கட்டுப்பாடு பல இடங்களில் கடுப்படிக்கிறது.

ஜபிலியும் அவரது தாயாரும் இதை சந்திக்கும் தருணங்கள் நமக்கே ஐயோ என்னும் நிலை. இந்த கேஸிற்குள் வருகிறார் பிரியதர்ஷி. மூன்று ஆண்டுகளாக தனியாக ஒரு வழக்குக்காக காத்திருக்கும் வக்கீல் வேடம். ராம் ஜெகதீஷ் தன்னுடைய கதையை செமையாக வடிவமைத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் பல இடங்களில் நம் இருக்கும் இடத்தை மறக்க செய்து கோர்ட்டுக்குள் நம்மை அழைத்து செல்லும் வகையில் காட்சியை கொடுத்து இருக்கிறார். போக்ஸோ சட்டம் தற்போது தப்பா கையாளப்படுகிறது. அதை கூட தீர விசாரிக்கணும் என்கிறதை ஆணித்தரமாக உடைத்திருப்பார்கள்.
தமிழகத்தில் கூட இப்படி பிரச்னைகள் நாளுக்கு நாள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு கேஸ் கூட தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் தெலுங்கு சினிமா தைரியமாக இதை படமாக்கி இருப்பதற்கே சபாஷ் போடலாம். தமிழ் டப்பிங் இருக்கு நெட்பிளிக்ஸில் மறக்காம பார்த்திடுங்க.