விஷால் படங்கள் வெளியாவதற்கு தடை!... அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்… ஏன் தெரியுமா?

by Arun Prasad |   ( Updated:2023-04-06 05:59:28  )
Vishal
X

Vishal

நடிகர் விஷால் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்தாலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் படுதோல்வியடைந்து வருகின்றன. தற்போது விஷால், “மார்க் ஆண்டனி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஷால் மீது வழக்கு

விஷால் சில ஆண்டுகளுக்கு முன்பு விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான அன்புச்செழியனிடம் 21 கோடிகள் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த கடனை விஷாலால் செலுத்த முடியாததால் இந்த கடன் சுமையை லைகா நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டதாம்.

இதன்படி விஷால் அந்த கடன் தொகையை லைகா நிறுவனத்திடம் திரும்ப தரும் வரை, அவரது திரைப்படங்களின் உரிமையை லைகாவுக்கு கொடுக்கவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டதாம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி விஷால் நடித்த “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை வேறு ஒரு விநியோகஸ்தருக்கு கொடுத்துவிட்டாராம். இதனால் விஷால் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அதிரடி தீர்ப்பு

லைகா நிறுவனம் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூபாய் 15 கோடியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு செலுத்தவேண்டும் எனவும் சொத்து பத்திரங்களை தாக்கல் செய்யவேண்டும் எனவும் விஷாலுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் விஷால். அந்த மேல்முறையீட்டு வழக்கில் விஷால் 15 கோடியை பதிவாளரிடம் செலுத்த வேண்டும், அப்படி செலுத்தாவிட்டால் அவரது திரைப்படங்களை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story