ஈஷா நடத்திய மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் - கோவை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்

by சிவா |
isha
X

தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ஈஷா கிராமோத்வம் திருவிழாவின் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவையில் நேற்று (செப்.10) கோலாகலமாக நடைபெற்றது. கோவை மாநகர மேயர் திரு.கல்பனா அவர்கள் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் என்னும் விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்கட்டமாக, கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் கோவையில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தேர்வான வாலிபால், த்ரோபால் மற்றும் கபடி வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியை கோவை மேயர் திருமதி. கல்பான தொடங்கி வைத்தார். மேலும், தொடக்க விழா நிகழ்வில் 13-வது வார்டு கவுன்சிலர் திருமதி. சுமதி மற்றும் 14-வது கவுன்சிலர் திருமதி. சித்ரா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் சூலூர் அணியை வீழ்த்தி நஞ்சுண்டாபுரம் அணி முதலிடம் பிடித்தது. இதேபோல், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் தேவராயபுரம் அணியை வீழ்த்தி புள்ளாகவுண்டன் புதூர் அணி முதலிடம் பிடித்தது.

இதுதவிர, தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கபடி போட்டியில் ஆண்கள் பிரில் ஈரோடு மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் கரூர் மாவட்ட அணியும் முதலிடம் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் திருமதி. வாசுகி அவர்கள் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.

மண்டல அளவில் தேர்வாகியுள்ள அணிகள் செப்.23-ம் தேதி கோவையில் ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெறும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன. அதில் கபடியில் முதலிடம் பிடிக்கும் ஆண்கள் அணிக்கு ரூ.5 லட்சமும், பெண்கள் அணிக்கு ரூ. 2 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. மேலும், வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும், த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது. சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story