கோலிவுட்டுக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை!.. பாலிவுட்டும் செஞ்சுரியா அடிக்கிறாங்களே.. இப்ப யாரு?

.

மலையாள திரை உலகத்தை போல இந்த ஆண்டு பாலிவுட்டும் இதுவரை ஹாட்ரிக் செஞ்சுரிக்களை அடித்து விட்டது. ஆனால் இதுவரை தமிழ் சினிமா ஒரு 100 கோடி படத்தைக் கூட கடந்த மூன்று மாதங்களில் வெளியிடவில்லை என்பதுதான் வெட்கக்கேடான விஷயமாக உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டியது. அதன் பின்னர் கதர் 2 600 கோடி ரூபாய் வசூலையும் ஜவான் 1100 கோடி வசூலையும் அனிமல் 900 கோடி வசூலையும் ஈட்டியது.

இதையும் படிங்க: வாயை வைத்து வாங்கிய வாய்ப்பு!… இயக்குனரை அசர வைத்த வெண்ணிற ஆடை மூர்த்தி!…

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஃபைட்டர் படத்தின் மூலம் 250 கோடி வசூலையும், சமீபத்தில் வெளியான ஜோதிகா நடித்த சைத்தான் திரைப்படத்தின் மூலம் 200 கோடி ரூபாய் வசூலையும் கடந்தது.

இந்நிலையில், தற்போது நடிகைகள் கரீனா கபூர், தபு மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான க்ரூ திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரசிகர்களைக் கதறி அழவைத்த சிவாஜியின் அந்த ஏழு படங்கள்!.. மறக்க முடியாத பாசமலர்!..

மலையாளத் திரை உலகம் இந்த ஆண்டு பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் ஆடு ஜீவிதம் உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மலையாளத் திரையுலகம் ஹாட்ரிக் அடித்ததை போலவே தற்போது பாலிவுட்டும் 3 படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்து ஹாட்ரிக் அடித்து உள்ளன.

ஆனால், அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் என வரிசையாக பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் எதுவுமே தமிழில் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலை இந்த ஆண்டு எட்டாத நிலையில், தமிழ் சினிமா கஷ்டமான சூழலில் உள்ளது. தெலுங்கிலும் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட நடிகைகள் நடிக்கும் படங்கள் எல்லாம் 100 கோடி வசூலை எட்டாத நிலையில், பாலிவுட்டில் உமன் செண்ட்ரிக் படங்கள் மாஸ் காட்டி வருகின்றன.

இதையும் படிங்க: கமல் இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல! அடிமையா போனதுதான் மிச்சம்.. ஆதங்கத்தில் இயக்குனர்

 

Related Articles

Next Story