Connect with us
ajith

Cinema News

அஜித் அப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்ல!.. நெகிழும் கிரிக்கெட் வீரர் நடராஜன்!..

அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். அதன்பின் பல படங்களிலும் சாக்லேட் பாயாக காதல் கதைகளில் நடித்தார். நிறைய ரசிகர்கள் மற்றும் ரசிகைகளும் உருவானார்கள். ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கினார். பில்லா, தீனா, மங்காத்தா போன்ற படங்கள் இவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது.

இந்த படங்களால் இவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகரித்தது. ஒருபக்கம் விஜய் வளர்ந்து கொண்டிருந்தார். அவருக்கு டஃப் கொடுத்தார் அஜித். சில படங்கள் தோல்வி அடைந்தாலும் அவ்வப்போது ஹிட் கொடுத்தார். வீரம், வேதாளம் போன்ற படங்கள் இவரின் மார்க்கெட்டை மேலே கொண்டு போனது.

ரஜினியின் பேட்ட படத்தோடு வெளியாகிய அஜித்தின் விஸ்வாசம் படம் வசூலில் சக்கை போடு போட்டது. இதைக்கண்டு ரஜினியே ஆச்சர்யப்பட்டார். அஜித் இனிமையாக பழகும் குணம் கொண்டவர். மிகவும் எளிமையானவர் என அவருடன் பழகிய பலரும் சொல்வார்கள். சாலைவிதிகளை சரியாக கடைபிடிப்பது, பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது, பெண்களிடம் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்வது அவரை பற்றி நிறைய சொல்வார்கள்.

சினிமாவில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த பைக் ஓட்டுவதை அவர் இப்போதும் பின்பற்றி வருகிறார். இவருக்கென ஒரு கேங் இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பைக்கை எடுத்துக்கொண்டு எங்கேயாவது போய் விடுகிறார். போகும் இடத்தில் என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிடுகிறார். அவரின் டீமுக்கு பிரியாணி சமைத்து கொடுக்கிறார்.

natarajan

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் அஜித் கலந்து கொண்டார். நடராஜனுக்கு அஜித் கேக் ஊட்டும் புகைப்படங்கள் கூட இணையத்தில் அப்போது வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த சந்திப்பு பற்றி ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் நடராஜன்.

அஜித் மிகவும் எளிமையானவர். சொன்னால் நம்ப மாட்டீர்கள்/ நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது எங்கள் எல்லோருடைய கார் கதவையும் திறந்துவிட்டு வழியனுப்பி வைத்தார். அவரை சந்தித்தது புதுவித அனுபவமாக இருந்தது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது’ என நெகிழ்கிறார் நடராஜன்.

google news
Continue Reading

More in Cinema News

To Top