Good Bad Ugly: 20 நிமிஷத்துக்கு மேல உட்கார முடியல..இதுதான் படமா? ‘குட் பேட் அக்லி’யால் நொந்து கொண்ட பிரபலம்

by Rohini |   ( Updated:2025-04-13 03:20:11  )
ajith (1)
X

ajith (1)

Good Bad Ugly: கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீஸான திரைப்படம் குட் பேட் அக்லி. படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முழுக்க முழுக்க அஜித்தை கொண்டாடுவது மாதிரியும் அஜித்தை பிரேமுக்கு பிரேம் மாஸாக காட்டுவது மாதிரியும் ஒரு உண்மையான ரசிகனாக ஆதிக் இதை செய்திருக்கிறார். வெறி கொண்ட அஜித் ரசிகன் ஆதிக் என அனைவருக்கும் தெரியும். அஜித்தின் வாக்குதான் வேதவாக்கு என்று இப்போது வரை பேசிக் கொண்டுவருகிறார்.

அதை அப்படியே படத்திலேயும் காட்டியிருக்கிறார். படத்தில் எங்கேயாவது எமோஷனல் கனெக்ட் ஆகும் என்று பார்த்தால் ஒரு இடத்தில் கூட அந்த எமோஷன் கனெக்ட் இல்லை. படத்தை வேடிக்கையாக காமெடியாக கொண்டு போயிருக்கிறார். இந்த நிலையில் குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு என பிரபல சினிமா விமர்சகர் பரத்வாஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

20 நிமிஷத்திற்கு மேல் அந்தப் படத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஏனெனில் இதுதான் படமுழுக்க வர போகிறது என தெரிந்து விட்டது. அஜித் சம்பந்தப்பட்ட ஒரு ஆக்‌ஷன் , மாஸ் காட்சிகளை ரீல்ஸ்களாக பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் இரண்டரை மணி நேரம் கொண்ட ஒரு ரீல்ஸ் படமாகத்தான் எனக்கு தெரிந்தது. எங்கேயும் சீரியஸ் இல்லை . திரிஷாவை கடத்திக் கொண்டு போகிறார்கள். அங்கு எதற்கு லேசா லேசா என்று சொல்லணும்?

வில்லனுக்கு எதற்கு ஒத்த ரூபா தர்றேன் பாடல் என்று இதுவரை எனக்கு புரியவில்லை. அந்த பாடலுக்கும் வில்லனுக்கும் என்ன சம்பந்தம்? இந்த படத்தில் இது இப்படி இருக்கு, அது இப்படி இருக்கு என பிரித்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. முழுக்க முழுக்க தியேட்டர் மூமெண்டாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இடைவேளையில் போய் எதுக்கு ஐ ஆம் வெயிட்டிங்னு வச்சிருக்காங்கனு தெரியல.

ஒரு போன் பேசும் போது எதிரே உள்ள நபர் பிஸியாக இருந்தால் சரி ஐ ஆம் வெயிட்டிங்தான் சொல்வோம். 10 வருடமாக இதைத்தான் சொல்கிறோம். இதை கொண்டு போய் இண்டர்வல் ப்ளாக்ல வச்சிருக்காங்க. ஆனால் படம் என்னப் பண்ண போகுதோ அதை பண்ணிருச்சு. அதையும் தாண்டி நாம் எதுக்கு படத்த பார்க்க போகிறோம் என ஒன்னு இருக்குல. எதாவது ஒரு கதையில் நம்மை அப்படியே முழ்கடிக்கணும்ல.

அது இந்த படத்துல இல்லை. எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முழுக்க முழுக்க அஜித்தை கொண்டாடுவோம் என்ற வகையில்தான் படம் இருக்கிறது. அப்போ அடுத்து என்ன ரெஃபரன்ஸ் வரும்? அஜித்தை எப்படி கொண்டாட போறாங்க என்றுதான் யோசிக்க வைக்கிறது. எங்கேயாவது ட்விஸ்ட் வருமானு பார்த்தால் அது இல்லை என பரத்வாஜ் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Next Story