Categories: Cinema History Cinema News Entertainment News latest news

சுவிட்ச் போட்ட மாதிரி கண்ணீர் வரும் – கமலின் அசாத்திய திறன் கண்டு அதிர்ச்சியடைந்த இயக்குனர்

தமிழ் சினிமாவில் எப்போதும் நடிப்பில் பெரிய நடிகர்கள் என கூறும்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் கெட்டிகாரர் என பேசப்படுபவர் நடிகர் கமலஹாசன் ஆவார்.

Also Read

ஏனெனில் வித்தியாசமான புது புது கதைகளை சினிமாவில் முயற்சித்தவராக கமலஹாசன் உள்ளார். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கதாபாத்திரங்களை கமல் எளிதாக நடித்துள்ளார்.

தற்சமயம் வரும் 3 ஆம் தேதி அவர் நடித்து வரவிருக்கும் விக்ரம் திரைப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் ”கமல் கண்களில் இருந்து நீர் வருவது போன்ற ஒரு காட்சி விக்ரமில் இருந்தது. அந்த காட்சியில் கேமிரா ஆன் செய்து 3 நொடிகளில் அவரது கண்களில் இருந்து நீர் வர வேண்டும். அதை சாதரணமாக செய்தார் கமல். அதை அவர் ஒரு மேஜிக் போல செய்தார்” என லோகேஷ் கூறியிருந்தார்.

இதே போல இயக்குனர் பாரதி ராஜா ஒருமுறை கூறும்போது “சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் ஒரு க்ளோஸ் அப் ஷாட்டில் கமல் அழுவது போன்ற காட்சி எடுக்க வேண்டி இருந்தது. அப்போது நான் கூறிய சமயத்தில் கண்ணீரை வெளிப்படுத்தி அசத்தினார் கமல்” என கூறினார்.

Published by
Rajkumar