'அந்த' மாதிரி படங்களில் நடிப்பீங்களா?.. இர்பான் கேட்ட ஏடாகூடமான கேள்வி.. நாக சைதன்யா கொடுத்த தெறி பதில்!

பிரபல யூடியூப் பிரபலம் இர்பான் உடன் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்ட ப்ரோமோஷன் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான நாக சைதன்யா நடிப்பில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி, ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சுவாமி ராஜூ எனும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நாக சைதன்யா அக்கினேனி நடிப்பில் இந்த ‘கஸ்டடி’ படம் தான் அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் படம் ஆகும். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

உலகம் முழுவதும் ’கஸ்டடி’ திரைப்படம் வரும் மே 12, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் நாக சைதன்யா பல ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் பிரபலம் இர்பான் உடன் ஒரு நிகழ்ச்சியில் நாக சைதன்யா கலந்து கொண்டார்.



பிரபல உணவகத்தில் உணவருந்தி கொண்டே இர்பான், நாக சைதன்யாவிடம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டு இருந்தார். குறிப்பாக "ஆபாச படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?" என்ற இர்பானின் கேள்விக்கு நாக சைதன்யா, "அதெல்லாம் நடிக்கமாட்டேன் ப்ரோ". என நாக சைதன்யா பதில் அளித்தார்.

உடனே பதில் கேள்வி கேட்ட இர்பான், "ஒரு ஆபாச பட நடிகரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் பயோகிராபி படத்தில் நடிப்பீர்களா?" என கேள்வி கேட்க, "ஒரு தடவை கதை கேட்டு இன்ஸ்பைராக இருந்தால் நடிக்கிறேன். கதை இருக்கா உங்கள் கிட்ட?." என நாக சைதன்யா பதில் அளித்தார். மேலும் "யாரிடமாவது இது போன்ற கதை இருந்தால் நாக சைதன்யாவை அணுகுங்கள்" என இர்பான் கூற உடனே "இர்பான்ட்ட கதை சொல்லுங்கள். இர்பான் படிச்சு பாத்துட்டு சொல்லட்டும்" என நாக சைதன்யா பதில் அளித்தார்.

 

Related Articles

Next Story