வாவ்.. எல்லாமே கூடிட்டே போகுதே.. கியூட் லுக்கில் மனசை அள்ளும் பிரியா பவானிசங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா பவானிசங்கர். இப்போது தமிழ் சினிமாவிலேயே ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறியிருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு தேடப்படும் நடிகையாகவே வலம் வருகிறார் பிரியா பவானிசங்கர். சமீபத்தில் ருத்ரன் படத்திலும் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒரு வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் முன்னனி இடத்தில் இருக்கிறார்.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பிரியா பவானி சங்கர் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாகவும் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு தெம்பூட்டி வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகான க்யூட்டான புகைப்படங்களை போட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.