Connect with us
CV Sridhar

Cinema History

இன்சுரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தவரை வசனகர்த்தாவாக ஆக்கிய ஸ்ரீதர்… அதுக்காக அவர் பண்ண விஷயம்தான் ஹைலைட்டே!!

நவீன தமிழ் சினிமாவின் முன்னோடி என்று அழைக்கப்படும் இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார்.

சி.வி.ஸ்ரீதர் தொடக்கத்தில் கதாசிரியராக பல வெற்றித் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் “கல்யாணப் பரிசு”. இத்திரைப்படத்தை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய ஸ்ரீதர், தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக வளர்ந்தார்.

CV Sridhar

CV Sridhar

ஸ்ரீதர் இயக்கிய பல திரைப்படங்களுக்கு வசனக் கர்த்தாவாக உதவியர் சித்ராலயா கோபு. இவர் “காசேதான் கடவுளடா”, “அத்தையா மாமியா” போன்ற பல திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவின் முன்னணி திரைக்கதை ஆசிரியராகவும் வசனக்கர்த்தாவாகவும் திகழ்ந்த சித்ராலயா கோபு, சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஒரு இன்ஸுரன்ஸ் கம்பெனியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஸ்ரீதர் “அமர தீபம்” என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்கான முயற்சியில் இருந்த காலகட்டத்தில், அவர் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை எடுத்துக்கொண்டு தனது நண்பரான கோபுவை அவரது அலுவலகத்திற்கு பார்க்கச் சென்றிருந்தார். அவரை காரில் ஏற்றிக்கொண்டு சுற்றியடித்த ஸ்ரீதர், “இப்போ என்ன சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்க?” என கேட்டாராம்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் குருவும் சிஷ்யனும்… செம மேட்டரா இருக்கே!!

Chitralaya Gopu

Chitralaya Gopu

அதற்கு கோபு, “200 ரூபாய்” என்றாராம். உடனே ஸ்ரீதர் “நான் உனக்கு மாதம் 400 ரூபாய் சம்பளம் தருகிறேன். நாளை காலை என்னிடம் உதவியாளராக வந்து சேர்ந்துவிடு என கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாது கோபுவின் மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காக ஒரு இடத்தில் காரை நிறுத்தி அங்கேயே ராஜினாமா கடிதத்தையும் எழுத வைத்தார்.

அதன் பின் இருவரும் இணைந்து கோபுவின் மேலதிகாரியிடம் அந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்கள். அதன் பின் ஸ்ரீதர் இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் கோபுவே துணையாக இருந்தாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top