புகழுக்கு கடும் போட்டியாக களமிறங்கிய குக் வித் கோமாளி முக்கிய பிரபலம்... நானும் இப்போ ஹீரோடா...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக, அதனை விட மக்கள் மனதில் ஆழமாக பதிந்த நிகழ்ச்சியும் இதுதான் .
இந்த நிகழ்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் என்றால் அது புகழ் தான். இரண்டாவது சீசனில் இவரை தாண்டி தான் மற்ற போட்டியாளர்கள் , கோமாளிகள் தெரிவார்கள் என்பதே உண்மை. இவர் ஹீரோவாக ஜூ கீப்பர் எனும் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டதால் தற்போது அந்த ஷோவுக்கு எப்போதாவது தான் வருவார்
தற்போது அந்த டீமில் இருந்து இன்னோர் நபர் ஹீரோவாக களமிறங்குகிறார். அவர் வேறு யாருமல்ல கடந்த 3 சீசன் ஒரு எபிசோட் விடாமல் கலந்து கொள்ளும் தொகுப்பாளர் ரக்சன் தான்.
இதையும் படியுங்களேன் - ஏடாகூடமாய் பேசி அந்த நடிகையிடம் கும்மாங்குத்து வாங்கிய மாதவன்… பல் உடைந்தது தான் மிச்சம்..
இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக விஷாகா திமன் நடிக்க உள்ளார். உடன் kpy 'கைதி' தீனா நடிக்கிறார். யோகேந்திரன் என்பவர் இயக்க உள்ளார். சச்சின் என்பவர் இசையமைக்க உள்ளார். குவியம் மீடியாவும் , இன்னோர் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. இப்பட பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
குக் வித் கோமாளி விரைவில் முடியயுள்ள நிலையில், இந்த பட பூஜையை ஆரம்பித்துள்ளார் ரக்சன். இறுதி போட்டிக்கு பின்னர் முழுவீச்சில் ஷூட்டிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.