CWC6: ஆரம்பிச்ச முத நாளே பிரச்னையா? போட்டியாளரை விமர்சித்த புகழால் கடுப்பாகும் ரசிகர்கள்…

#image_title
CWC6: குக் வித் கோமாளி ஆறாவது சீசன் 6 கோலாகலமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளே தற்போது பிரச்சனைகள் படை எடுக்க தொடங்கி இருக்கிறது.
விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி. முதல் நான்கு சீசன்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரல் வெற்றியை பெற்ற நிலையில், அதை ஐந்தாவது சீசனில் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தயாரிப்பு நிறுவனம் தயங்கியது.
இதனால் தொடங்கப்பட இருக்கும் ஆறாவது சீசனில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தனர். அந்த வகையில் நேற்று இதன் முதல் எபிசோடு வெளியானது. இந்த முறை இரண்டு நடுவர்களுக்கு பதிலாக மூன்று நடவர்கள் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கின்றனர்.
போட்டியாளர்கள் வித்தியாசமான துறைகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எப்போதுமே கோபம் முகம் காட்டும் லட்சுமி ராமகிருஷ்ணன், அதிகம் பேசாத ப்ரியா ராமன், நடிகை ஷபானா, காமெடியில் கலக்கும் ராஜு, மெரினா கடை சுந்தரி அக்கா என பட்டியல் வித்தியாசமாக அமைந்தது.

இதில் போட்டியளராக உள்ளே வந்திருக்கும் சௌந்தர்யா தான் பலருக்கு ஆச்சரியமான எண்ட்ரி ஆக மாறி இருக்கிறார். பொதுவாக பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் தான் இப்படி மாற்றம் இருக்கும். ஆனால் குக் வித் கோமாளியில் இந்த மாற்றம் ரசிகர்களிடமும் புகழப்பட்டது.
இவர் பிரபல யூட்யூப் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இவருடைய அறிமுக நிகழ்ச்சியில் தன்னை குறித்த அவர் பேசி வரும்போது தனக்கு சமைக்க பிடிக்கும் என சௌந்தர்யா தெரிவித்திருப்பார். அதற்கு பக்கத்தில் நின்ற புகழ் சமைச்சி நீயே சாப்பிடுவியா என அவர் உடல் எடையை கி்ண்டல் அடித்திருப்பார்.
முதல் சில சீசன்களில் புகழின் காமெடிகள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. ஆனால் தற்போதயெல்லாம் பலரை முகம் சுழிக்கும் வகையில் இவருடைய காமெடி கடுப்பை ஏற்படுத்துவது போல கடுப்பை ஏற்படுத்துவது போல இருக்கிறது. இதனால் முதல் முறை பார்க்கும் ஒருவரிடம் இப்படித்தான் நாகரிகமாக பேசுவீர்களா எனவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி விடுகின்றனர்.